Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழையால் ஆறுகளில் உயரும் வெள்ளம்.. மக்களை காக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளநீர் அபாயகட்டத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் மழையால் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அசாம் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கித் தவித்ததை தொடர்ந்து, இமாச்சல், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், டெல்லி என வட இந்தியாவின் பல மாநிலங்களும் அடுத்தடுத்து வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் சாலைகள், பாலங்கள் முற்றிலும் சிதைந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. டெல்லியிலும் கனமழை பெய்து வருவதால் நாட்டின் தலைநகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Floods rise in rivers due to heavy rains Uttar Pradesh Chief Minister Yogi Adityanath orders to protect people

உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் மழையால் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் எடவா, உன்னாவ், ஆக்ரா, பாலியா, ஜலாவ்ன், கான்பூர், டேகாத், கன்னாவ்ஜ், காசிபூர், மணிப்பூரி, பேரேலி மற்றும் கவுசாம்பி ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 17 பேரும், ஆறு, குளம் உள்பட நீரில் மூழ்கி 12 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். மழையால் மொத்தம் 34 பேர் ஒரே நாளில் உயிரிழந்தது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக அறிவித்தார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். மழை வெள்ள பாதிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்திய முதல்வர் யோகி ஆதித்யநாத், மழை வெள்ளம், இடி மின்னல் குறித்த அறிவிப்புகளை துல்லியமாக தெரிவித்து மனித உயிர்களையும், விலங்குகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், அடுத்த சில நாட்களில் மாநிலத்தின் பல்வேறு ஆறுகளின் நீர்மட்டம் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத். நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத்துடன், நிவாரணம் மற்றும் மீட்பு தொடர்பான அனைத்து துறைகளும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.

ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், இந்த ஆண்டு இதுவரை 24 மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. 31 மாவட்டங்களில் சராசரியை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. ஆனால், ஜூலை மாதத்தில் இந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாறிவரும் வானிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து முக்கிய நீர் நிலைகளிலும் ஆற்றின் கரைகளிலும் உதவி பொறியாளர்கள் நிலையில் உள்ள பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக யோகி கூறினார். அவை 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மண்டல அலுவலர்கள்/ஊழியர்களால் அணைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. தற்போது மழை தீவிரமடைந்துள்ளதால் ஆற்றின் கரையோரங்களில் ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள், நிவாரணப் பொருட்கள், பெட்ரோமாக்ஸ் போன்றவற்றை உரிய நேரத்தில் ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். வெள்ளம் மற்றும் அதிக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் தாமதம் ஏற்படக் கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றும் யோகி ஆதித்யாநாத் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை மானி அமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். வருவாய், நிவாரணம், வேளாண்மை, மாநில பேரிடர் மேலாண்மை, இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் போன்ற துறைகள் நெருக்கடியான நேரத்தில் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பல இடங்களில் கங்கை நதியின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி உயர்ந்துள்ளது. அனைத்து ஆறுகளின் நீர் மட்டத்தையும் கண்காணிக்க வேண்டும். வெள்ளச்சேதம் ஏற்படும் பகுதிகளில் மீட்புப்பணிக்காக பேரிடர் மீட்புக்குழுவினர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வெள்ளத்தின் போது தண்ணீர் தேங்கும் சூழ்நிலை ஏற்படும் கிராமங்களில் கால்நடைகளை தேவைக்கு ஏற்ப பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். இந்த இடங்களில் கால்நடை தீவனத்திற்கு போதுமான ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+