பிரதமர் மோடி விழாவில் அரங்கேறிய திருட்டு.. பூந்தொட்டிகளை கூட்டம் கூட்டமாக தூக்கி சென்ற மக்கள்.. வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 65 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவின்போது பிரதமர் மோடியை வரவேற்க சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த பூந்தொட்டிகளை பொதுமக்கள் போட்டி போட்டு தூக்கி சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல் (Rashtriya Prerna Sthal) என்ற பெயரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளையொட்டி அங்கு வாஜ்பாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர வெண்கலச் சிலைகளும், 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தாமரை வடிவ அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவிடம், சிலைகள், அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் ஒவ்வொரு இடமாக சுற்றி பார்த்தார். இங்கு ஹெலிபேட், பொதுக்கூட்ட மைதானம், கபிடேரியா, மல்டி பர்பஸ் ஹால், இயற்கை எழில் மிகுந்த தோட்டம், ஓபன் ஏர் தியேட்டர் உள்பட பல வசதிகள் உள்ளன.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காக லக்னோவின் மேம்பாட்டு வாரியம் மற்றும் லக்னோ மாநகராட்சி சார்பில் சாலையோரங்கள் பூந்தொட்டிகள் மற்றும் தொங்கும் தோட்டம் உள்ளிட்டவற்றை அமைத்து இருந்தன. ஆந்திரப் பிரதேசம், நைனிடால், டெல்லி, புனே போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 1.5 லட்சம் அழகிய அலங்கார தாவரங்கள் கொண்டு வரப்பட்டது.
லக்னோ வசந்த் கஞ்ச் ரோடு மற்றும் மோடி திறந்து வைத்த நினைவிடத்தை சுற்றி பல சாலைகளில் அலங்காரத்துக்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. இது பார்க்க பசுமையாக காட்சியளித்தது. ஆனால் பிரதமர் மோடி விழா முடித்து புறப்பட்ட சென்ற பிறகு பலரும் போட்டி போட்டு பூந்தொட்டிகளை தூக்கி சென்றனர். சிலர் வாகனங்களில் வந்து பூந்தொட்டிகளை போட்டி போட்டு தூக்கி சென்றனர்.
இதுதொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. இதனை பார்க்கும் பலரும் பூந்தொட்டிகளை தூக்கி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லக்னோ போலீஸ் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications