குளிர் காலமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரி ஆகிடும்..அமைச்சர் விளக்கம்
லக்னோ: குளிர் காலங்களில் தேவை அதிகரித்து, பெட்ரோல் விலை உயர்வது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்துள்ள அமைச்சர் தர்மேந்திர பிரதான், குளிர் காலத்திற்குப் பின் விலை குறையும் என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ. 100ஐ நெருங்கி வருகிறது .இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,
மேலும், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சரக்கு சேவைகளும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை
இந்நிலையில், உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், விலையேற்றத்திற்கான காரணத்தை விளக்கியுள்ளார். அவர் பேசுகையில், "சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வதால் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலம் முடிந்தவுடன் நிச்சயம் எரிபொருள் விலை குறையும்.

குளிர் காலம்
இது ஒரு சர்வதேச சிக்கல். தேவை அதிகமாக இருக்கும்போது எரிபொருட்களின் விலை உயரும். குளிர் காலங்களில் வழக்கமாக இது ஏற்படும். குளிர் காலம் முடிந்ததும் விலை மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிடும்" என்றார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீது மத்திய அரசும் மாநில அரசும் தனி தனியாக வரி விதிக்கிறது. இத்துடன் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலையேற்றமும் இணைந்து கொள்வதால் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

வட வட கிழக்கு மாநிலங்கள்
நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "அசாம் மாநிலத்தின் டிக்பாய் மற்றும் துலியாஜன் பகுதிகளில் கச்சா எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் வளங்களில் சுமார் 18 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்தில் மட்டுமே அமைந்துள்ளது.

விலை குறையும்
அசாம், அருணாசல், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா ஆகியவை எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் நிறைந்த பகுதிகள். 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு ஆட்சி அமைத்த போது, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுகளுக்கு தேவையான குழாய் இணைப்பு, ஆய்வு, சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றின் உள்கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தோம். இதனால் விரைவில் இறக்குமதி என்பது குறித்து எரிபொருள் விலையும் குறையும்" என்றார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications