உங்களுக்கு இதயமே இல்லையா... இப்படியா செய்வீங்க... கம்புகளால் டால்பினை அடித்துக் கொன்ற 3 பேர் கைது!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் டால்பினை காம்புகளால் அடித்து கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கயவர்கள் டால்பினை அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் இருந்து வெளிவந்த ஒரு வீடியோ பார்ப்போரை கலங்கடித்தது. அதாவது கங்கை நதியில் 4-க்கும் மேற்பட்டோர் ஒரு டால்பினை குச்சிகள் மற்றும் கம்பிகளால் கொடூரமாக தாக்கும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த குழுவினர் அந்த டால்பினை கம்புகள், ஆயுதங்களால் கொடூரமாக தாக்குகின்றனர். அந்த டால்பினில் இருந்து இரத்தம் வெளியேறியபோதும், கல் மனம் கொண்ட அந்த கொடூரர்கள் கோடரியால் டால்பினை வெட்டுகின்றனர். அங்கிருந்த சிலர் எந்த காரணமும் இல்லாமல் ஏன் அதைத் தாக்குகிறீர்கள் என்று கேட்டனர். ஆனாலும் அந்த பாவிகள் முடிவில் அந்த டால்பினை அடித்தே கொன்று விடுவதுபோல் இந்த வீடியோ அமைந்துளளது. இதனை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை பார்த்த பிரதாப்கர் போலீசார் டால்பினை அடித்தவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அதன்பேரில் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கங்கை டால்பின் ஒரு பாதுகாக்கப்பட்ட இனம் என்றும் டிசம்பர் 31 ம் தேதி இந்த சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications