சிறு, குறு மற்றும் குடிசை தொழில்களை வளர்க்க கூடுதல் நிதி! சாதித்து காட்டிய உத்தரப் பிரதேச அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறு, குறு மற்றும் குடிசை தொழில்களை ஊக்குவிக்க சீரான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என அம்மாநிலத்தின் அமைச்சர் ராகேஷ் சச்சன் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான நேற்று சிறு, குறு மற்றும் குடிசை தொழில்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு எம்எஸ்எம்இ துறை அமைச்சர் ராகேஷ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

அதில், "குடிசை தொழில்களை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு சீரான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் 'பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின்' கீழ் ரூ.50 முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் குடிசை தொழில்களுக்கு 15-35 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல 'முதலமைச்சரின் யுவ ஸ்வரோஸ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்க முன் வந்திருப்பவர்களுக்கு மொத்த முதலீட்டில் 25 சதவிகிதம் வரை நிதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்கும் நபர்களுக்கு அதன் மொத்த மதிப்பீட்டில் 20 சதவிகிதம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கும் சந்தையில் மதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே அரசு சிறு, குறு மற்றும் குடிசை தொழில்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications