உத்தர பிரதேசத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்தது.. அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொடூர குற்றங்கள் கணிசமாக குறைந்து இருப்பதையடுத்து அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கொடூர குற்றங்கள் கணிசமாக குறைந்து இருப்பதையடுத்து அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்த அறிக்கையை முதல்வர் யோகி ஆதிதயநாத்திடம் வழங்கினர்.

heinous Crime dip UP CM Yogi Adityanath lauded the police officers who woked hard

இதில் மாநிலத்தில் கொடூர குற்றங்கள் பதிவாகும் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. அதாவது, கடந்த ஆறு ஆண்டு கால யோகி ஆட்சியில் கொலை குற்றங்கள் 6 சதவிகிதமும் கொள்ளை சம்பவங்கள் 16 சதவிகிதமும் குறைந்து இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. பாலியல் குற்றங்களும் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொலை குற்றங்கள் சரிந்தாலும் சில மாவட்டங்களில் குற்றங்கள் அதிகரித்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய யோகி ஆதிதயநாத், குற்ற சம்பவங்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களின் காவல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குற்ற சம்பவங்கள் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குற்ற செயல்கள் குறையாத மாவட்ட காவல் அதிகாரிகளை கண்டிக்கவும் செய்தார். அடுத்த மாத அறிக்கையில், குற்ற சம்பவங்கள் குறையாமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இது தொடர்பாக மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "கடந்த 8 மாதங்களில் உத்தர பிரதேசத்தில் 1,921 கொலை குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில், 1,322 முதல் தகவல் அறிக்கைகளும் 90 வழக்குகளில் இறுதி அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 509 வழக்குகளில் விசரணையில் உள்ளது. அம்ரோஹா, ஜான்சி மற்றும் ஹர்தோய் ஆகிய மாவட்ட போலீசாருக்கு யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+