ஆக்சிஜன் பற்றாக்குறை என போலி எச்சரிக்கை... மருத்துவமனை மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு
லக்னோ: ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருந்தபோதும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருபதாகக் கூறிய மருத்துவமனை மீது உத்தரப் பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாட்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகப் போலி செய்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருந்தபோதும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருபதாகக் கூறிய மருத்துவமனை மீது உத்தரப் பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதாவது லக்னோவில் உள்ள அந்த மருத்துவமனை நிர்வாகம் கடந்த மே 3ஆம் தேதி, சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதில், உத்தரப் பிரதேச முதல்வரிடமும் மத்திய அரசிடமும் பல முறை வலியுறுத்திய பிறகும் போதிய அளவு ஆக்சிஜனை பெற முடியவில்லை என்பதால் உறவினர்கள் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து லக்னோ நகராட்சி அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவமனையில் மே 2ஆம் தேதி 17 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததும் அப்போது 58 ஜம்போ சிலிண்டர்கள் மருத்துவமனைகளில் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் இருந்தபோதும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருபதாகப் போலியாக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியாக கூறிய மருத்துவமனை இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications