மோடியை புகழ்ந்த மனைவி.. கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கணவர்.. முத்தலாக் கூறியதால் வழக்கு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய மனைவியின் மீது கொதிக்க கொதிக்க சாம்பாரை கணவர் ஊற்றியுள்ளார். மேலும், முத்தலாக் சொல்லி அவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அயோத்தியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. அயோத்தியின் வளர்ச்சி, அங்குள்ள சாலைகள், அதன் சூழ்நிலைகள் அப்பெண்ணுக்கு பிடித்துப்போக முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கணவர் கொதிக்கும் சாம்பாரை அப்பெண்ணின் மீது ஊற்றியுள்ளார். முத்தலாக் சொல்லி அவரை விவாகரத்தும் செய்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும் அப்பெண் கூறியுள்ளது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்தவர் மரியம். மரியத்துக்கும், அயோத்தியைத் சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பிறகு மரியம் தனது கணவரின் சொந்த ஊரான அயோத்தியில் வசித்து வந்துள்ளார்.
அயோத்தி நகரின் வளர்ச்சி, அங்குள்ள சாலைகள், அந்த நகரின் அழகு என மரியத்துக்கு அயோத்தியை மிகவும் பிடித்துள்ளது. இதையடுத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் தனது கணவர் அர்ஷத் முன்பு புகழ்ந்து பேசியுள்ளார்.
இதனால், கடும் ஆத்திரமடைந்த அர்ஷத் மரியத்தை அவரது தாய் வீட்டுக்கே அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்து, மீண்டு அர்ஷத்தின் வீட்டுக்கு மரியம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். பிரதமரையும், முதல்வரையும் புகழ்ந்து மரியம் பேசியதால் கடும் கோபத்தில் இருந்த அர்ஷத் அவரை அடித்து உதைத்ததாகவும், கொதிக்கும் சாம்பாரை அவரது மேல் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முதல்வரையும், பிரதமரையும் கடுமையாக திட்டியுள்ளார். தொடர்ந்து, மரியத்தை பார்த்து தலாக் என்று மூன்று முறை கூறியுள்ளார். அர்ஷத்தின் குடும்பத்தினரும் மரியத்தின் கழுத்தை நெரித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மரியம் பஹ்ரைச் நகர காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கணவர் அர்ஷத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மரியம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எனக்கும், அயோத்தியைச் சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்துக்காக எனது தந்தை அவரால் முடிந்ததைவிட அதிக செலவு செய்துள்ளார். பின்னர், திருமணம் முடிந்த கையோடு அயோத்திக்குச் சென்றோம். அந்நகரின் சாலைகள், வளர்ச்சி, அதன் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதனால், பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை புகழ்ந்து பேசினேன். இதனால், ஆத்திரமடைந்த அர்ஷத் என்னை எனது பிறந்த வீட்டிற்கே அனுப்பிவைத்தார். உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் சேர்த்துவைத்தனர். ஆனாலும், பிரதமரையும், முதல்வரையும் புகழ்ந்து பேசியதால் என்னை மிகவும் மேசமாக திட்டினார்.
மேலும், முத்தலாக் சொல்லி, முகத்தில் சாம்பாரை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். எனது மாமியார், கணவரின் சகோதரர், சகோதரி ஆகியோர் சேர்ந்து என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர் என்று கூறியுள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications