உ.பி: அத்திக் அகமதுவை ஜெய்ஶ்ரீராம் கோஷத்துடன் கொன்றவர்கள் பயங்கரவாதிகளா? தேசப்பற்றாளர்களா? -ஓவைசி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் போலீசார் முன்னிலையிலேயே செய்தியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தாதாவும் முன்னாள் எம்பியுமான அத்திக் அகமது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஓவைசி வலியுறுத்தி உள்ளார்.
உ.பி. மாநிலம் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த அத்திக் அகமது, அம்மாநில போலீசாருக்கு சவால்விட்ட பிரபல தாதா. ஒட்டுமொத்த குடும்பமும் நிழல் உலக சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இந்தக் குடும்பத்தின் மீது மட்டும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதுவும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என வழக்குகள் பட்டியல் நீண்டது.

நிழல் உலக சாம்ராஜ்யம் மூலம் அத்திக் அகமது குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ1,000 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி மட்டுமே ரூ11,000 கோடி சொத்துகள் அத்திக் குடும்பத்துக்கு இருக்கிறதாம். அத்திக் முன்னாள் எம்பி.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜூ பால் 2005-ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அத்திக் அகமது உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். ராஜூ பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சி உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் அத்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்ப்கில் அத்திக் மகன் ஆசாத் அகமதுவும் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது தலைக்கு ரூ5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் ஆசாத் அகமது சில நாட்களுக்கு முன்னர் போலீஎஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜெய்ஶ்ரீராம் கோஷம்: ஆசிக் அகமதுவின் இறுதி சடங்கில் அத்திக் அகமது பங்கேற்றார். பின்னர் நேற்று பிரக்யாராஜ் நீதிமன்றத்துக்கு அத்திக் அகமது அழைத்துவரப்பட்டார். அப்போது ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அத்திக் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் அவரை நெருங்கிய கொலையாளிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர். அவரது சகோதரர் அஷரப்பும் படுகொலை செய்யப்பட்டார். இத்தனையும் போலீசார் முன்பாகவே நடந்தது. போலீசார் 2 கொலையாளிகளை சுற்றி வளைத்த போது ஜெய்ஶ்ரீராம் என கோஷங்கள் எழுப்பினர்.

பயங்கரவாதிகள் இல்லையா?: இச்சம்பவத்துக்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓவைசி கூறியதாவது: உத்தரப்பிரதேசத்தில் எப்போதும் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றதே இல்லை. உ.பியில் துப்பாக்கி முனையில்தான் அரசாங்கம் நடைபெறுகிறது. அத்திக் அகமது அப்பட்டமாக பச்சைப் படுகொலை செய்யபப்ட்டுள்ளார். இப்படுகொலை அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை கேள்வி எழுப்புகிறது. இந்தப் படுகொலையில் உ.பி. ஆளும் பாஜக அரசுக்கு தொடர்பிருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். அக்குழுவில் உ.பி.யை சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறக் கூடாது. கொலையாளிகளுக்கு ஆயுதங்கள் எப்படி கிடைத்தன? படுகொலை செய்த பின்னர் ஏன் ஜெய்ஶ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பினர்? அவர்களை ஏன் பயங்கரவாதிகள் ஏன் அழைக்கக் கூடாது? இந்த கொலையாளிகளை தேசபக்தர்கள் என அழைக்கப் போகிறீர்களா?
#WATCH | Uttar Pradesh: Moment when Mafia-turned-politician Atiq Ahmed and his brother Ashraf Ahmed were shot dead by assailants while interacting with media.
— ANI (@ANI) April 15, 2023
(Warning: Disturbing Visuals) pic.twitter.com/PBVaWji04Q
ராஜினாமா செய்யட்டும்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இப்படுகொலை சம்பவ இடத்தில் இருந்த அனைத்து போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இத்தகைய மதவெறித்தனம் நிறுத்தப்பட வேண்டும். இதற்கான நான் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். உத்தரப்பிரதேசத்துக்கு நான் செல்ல இருக்கிறேன். நான் அச்சப்படுவது கிடையாது. இவ்வாறு ஓவைசி கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications