என்ன மனுஷன் சார் இவர்... உ.பியை வியக்க வைக்கும் ஐஏஎஸ் அதிகாரி.. யார் இந்த அஜய் சங்கர்?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் அஜய் சங்கர் பாண்டே தனது அலுவலகத்தை உதவியாட்களின் உதவியின்றி தானே சுத்தம் செய்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
சுத்தம் சோறு போடும் என்பார்கள். தன்னையும் தனது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம் என்பார்கள். ஆனால் இன்றோ சாதாரண பணிகளில் இருப்போர் கூட தங்களது அறையை சுத்தப்படுத்த ஆட்களையோ இயந்திரத்தையோ நாடும் நிலை உள்ளது.
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நகர திட்டம் மற்றும் வளர்ச்சி பிரிவு ஆணையராக பணியாற்றி வருபவர் டாக்டர் அஜய் சங்கர் பாண்டே.

சுத்தம்
இவர் தனது அறையை தானே சுத்தம் செய்து கொள்கிறார். பணியாட்கள் நிறைய பேர் இருந்தாலும் அவர் அறையை சுத்தம் செய்து கொள்பவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரது அறைக்கு அலுவலக நேரம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிடுவார் அஜய்.

பார்வையாளர்கள்
இவர் முதலில் தனது அறையை சுத்தம் செய்துவிடுவார். அதன் பிறகு அலுவலக பணிகளை தொடங்குவார். அதுமட்டுமல்லாமல் அலுவலகத்தை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு நல்குமாறு தனது பார்வையாளர்களையும் அவர் கேட்டுக் கொள்வார்.

ஜான்சி
ஆரம்பத்திலிருந்தே சுத்தமாக வைத்திருப்பதை அஜய் செய்து வருகிறார். எந்த உயர் பதவியில் அமர்ந்தாலும் சரி தனது அறையை சுத்தம் செய்வது அஜய் தான். இவரை பார்த்து மற்ற ஊழியர்களும் தங்கள் இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறார்களாம். அஜயின் முன்மாதிரியான எடுத்துக்காட்டு ஜான்சி பகுதியில் உள்ள அலுவலர்கள், ஊழியர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறது.

ஊழியர்கள்
இந்த சுத்தப்படுத்தும் பணிகளை செய்யும்படி தனது ஊழியர்கள் யாரையும் தான் நிர்பந்திக்கவில்லை என கூறுகிறார் அஜய். என்னை பார்த்து யாராவது சுத்தத்தை கடைப்பிடித்தார்கள் என்றால் அதை நான் வரவேற்கிறேன் என்றார் அஜய்.












Click it and Unblock the Notifications