பெயரை மாற்றி காதல்.. "எல்லாம்" முடிஞ்சதும் டக்கென நழுவ பார்த்த "ரோமியோ".. தட்டி தூக்கிய போலீஸ்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தன்னுடைய பெயரை மாற்றி இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் நழுவ முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் இளைஞனின் குடும்பத்தினர் பெண்ணை மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இளைஞனின் உறவினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் கவுதம் புத்தர் நகரை சேர்ந்தவர் இன்டேசர். 30 வயதான இந்த நபர் அவர் வசித்து வரும் பகுதியில் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜிம்மை நடத்தி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண் ஒருவர் ஜிம்மில் புதியதாக சேர்ந்திருக்கிறார். புதியதாக வருபவர்களுக்கு இன்டேசர்தான் ட்ரெயினிங் கொடுப்பார். அந்த வகையில் இந்த பெண்ணுக்கும் ட்ரெய்னிங் கொடுத்திருக்கிறார்.
அதன் பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி பழகியுள்ளனர். பின்னர் அடிக்கடி வெளியில் சென்றிருக்கின்றனர். அப்போதுதான் இவர்களிடையில் காதல் மலர்ந்திருக்கிறது. இதனையடுத்து இன்டேசரின் பெற்றோரை பார்க்க வேண்டும் என்று இளம்பெண் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இன்டேசர் தனது பெற்றோரை அறிமுகப்படுத்தி வைக்கவில்லை மட்டுமல்லாது தனது உண்மையான பெயரை மறைத்து சோனு என்று தன்னை இளம்பெண்ணிடம் அடையாளப்படுத்தி இருக்கிறார்.

காதல்
ஆனால் இளம்பெண்ணுக்கு இவரின் உண்மையான பெயர் தெரிந்திருக்கவில்லை. இதனையடுத்து காதல் நீண்டு கொண்டிருக்கையில் ஒருநாள் இவருடைய வீட்டிற்கு சோனு எனும் இன்டேசர் இப்பெண்ணை அழைத்திருக்கிறார். இப்பெண்ணும் நம்பி சென்ற நிலையில், சோனு பழச்சாறு கொடுத்திருக்கிறார். இதனை குடித்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து சோனு இவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். கண் முழித்த பின்னர் இவருக்கு நடந்துள்ள சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்குள் சோனு இப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.

பாலியல் பலாத்காரம்
பின்னர் இவர்கள் இருவருக்கு இடையேயும் அவ்வப்போது சண்டை மேலெழுந்திருக்கிறது. குறிப்பாக சோனு திருமணம் குறித்து எவ்வித செய்தியையும் உறுதியாக கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த இளம்பெண் சோனுவின் பின்னணி குறித்த தேடி சென்றிருக்கிறார். அப்போதுதான் இவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது இவர் சோனு கிடையாது என்றும், இவருடைய உண்மையான பெயர் இன்டேசர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் இவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது சண்டை பெரிய அளவில் வெடித்திருக்கிறது.

சண்டை
பின்னர் இன்டேசரின் பெற்றோரிடத்தில் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்படி கேட்ட நிலையில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிப்பதாகவும் ஆனால் தங்களுடைய மதத்திற்கு மாற வேண்டும் என்று சொன்னதாகவும் தெரிகிறது. இதனையடுத்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து பாலியல் பலாத்கார வழக்கிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின் கீழும் சோனு எனும் இன்டேசரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு துணையாக இருந்தாக இவரது குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதமாற்ற தடை சட்டம்
உத்தரப் பிரதேச மாநிலத்தை பொறுத்த அளவில் திருமணத்திற்காக மதம் மாறுவது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. மட்டுமல்லாது இக்குற்றதை செய்ய ஊக்குவிப்பவர்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் இவ்வாறு திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அரசு ஏற்றுக்கொள்ளாது. இக்குற்றத்தை இரண்டாவது முறையாக செய்ய ஊக்கவிக்கும் நபருக்கு தண்டனை அதிகரிக்கப்படும். மூன்றாவது முறையும் இவ்வாறு அந்நபர்கள் செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது.












Click it and Unblock the Notifications