மக்களின் குறைகளை தீர்க்கும் இ-அலுவலகம்.. இன்று முதல் உ.பி முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இனி அனைத்து மாவட்டங்களிலும் இ-அலுவலகம் செயல்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இப்படி கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம்தான் இ-அலுவலகம். உத்தரப்பிரதேச அரசு மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பணிகளையும் முழுவதுமாக இ-அலுவலகம் மூலம் நடத்தும், எனவே அனைத்து மாவட்டங்களிலும் இ-அலுவலகம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த அலுவலகங்கள் மூலம் மக்கள் தங்கள் குறைகளை சரி செய்துக்கொள்ளலாம். உதாரணமாக நில அளவீடு, ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் பெயர் மாற்றம் போன்றவை இதன் மூலம் செய்துக்கொள்ளலாம்.
அதேபோல மாவட்ட ஆட்சியருக்கு வேண்டும் தகவல்கள் அனைத்தும் இந்த இ-அலுவலகம் மூலம் பெறப்பட்டு வழங்கப்படும். மேலும் அரசு போடும் உத்தரவுகள் அனைத்தும் நிறைவேற்ற இந்த இ-அலுவலகங்கள் இன்றியமையாததாக இருக்கிறது. எனவே இந்த அலுவலகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்த கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இந்த திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications