'பளார்..' உபி-இல் மேடையிலேயே எம்எல்ஏவை அறைந்த விவசாயி.. பரபர வீடியோவுக்கு பாஜகவின் விளக்கம் என்ன??
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மேடையிலேயே பாஜக எம்எல்ஏ ஒருவரை விவசாயி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக வித்தியாசமான ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது.
Recommended Video
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன.
உபி-இல் பல்வேறு கட்சிகளும் போட்டியிடுகிறது. இருப்பினும், அங்கு பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

உத்தரப் பிரதேசம்
அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியே நேரில் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார். இந்தச் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே விவசாயி ஒருவர் பாஜக எம்எல்ஏவை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சுமார் 21 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் வீடியோவில் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மேடை ஒன்றில் அமர்ந்துள்ளார். அப்போது வயதான விவசாயி ஒருவர் மேடையில் ஏறி, எம்எல்ஏ அருகே வருகிறார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பாஜக சட்டசபை உறுப்பினரை அந்த விவசாயி பளார் என ஒரு அறை விடுகிறார். உடனடியாக அந்த விவசாயியைச் சிலர் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும், அவரிடம் கேள்வி எழுப்பியவாறே மேடையில் இருந்து அழைத்துச் செல்கின்றனர்.

ஒரே அறை
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. மூத்த பாஜக தலைவர் கல்யாண் சிங்கின் பிறந்தநாளான ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற்ற விழாவின் போது இந்த சம்பவம் நடந்ததுள்ளது. இந்த வீடியோவில் உள்ள பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா மற்றும் அவரை அடித்தாக கூறப்படும் விவசாயி பெயர் சத்ரபால் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

சமாவஜ்வாடி சாடல்
இந்நிலையில், இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சி தனது தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், "பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில், விவசாயி ஒருவர் எம்எல்ஏவை அறைந்தார். இந்த அறை எம்எல்ஏவுக்கானது அல்ல, மாறாக பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கைகள், மோசமான ஆட்சி மற்றும் எதேச்சதிகாரத்துக்கான அறை" என்று ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

பாஜக விளக்கம்
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா விளக்கம் அளித்துள்ளார். அவரும் விவசாயி சத்ரபாலும் இது தொடர்பாக ஒன்றாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்த முதியவர் தன்னை அறையவில்லை என்றும் செல்லமாகவே தன்னை அடித்ததாகவும் பங்கஜ் குப்தா தெரிவித்தார். இருப்பினும், இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாகவும் விமர்சித்தார். அதேபோல அந்த முதியவரும் தனக்கும் எம்எல்ஏவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மேடையில் இருந்த எம்எல்ஏவை தான் அன்பாகத் தட்டியதாகவே கூறினார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications