சாலையில் நமாஸ் செய்த 150 பேர் மீது வழக்கு... உத்தர பிரதேசத்தில் பரபரப்பு... நடந்தது என்ன?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் அனுமதியின்றி மசூதியின் முன்புள்ள ரோட்டில் நமாஸ் செய்ததாக 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 144யை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லி , மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட சில இடங்களில் மதரீதியிலான மோதல்கள் நடந்தன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் மே மாதம் 3 ம் தேதி ரம்ஜான் மற்றும் அக்ஷய திருதியை ஒரே நாளில் வர வாய்ப்புள்ளது. இதையொட்டி உத்தர பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அம்மாநில பாஜக அரசு எடுத்துள்ளது.

உபியில் முன்னெச்சரிக்கை
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கும் மே 4 வரை விடுமுறை ரத்து செய்யப்ட்டது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கவும், ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.

போலீசாருக்கு அறிவுரை
மேலும் பொதுவெளியில் உரிய அனுமதியின்றி ஊர்வலங்கள், மதம்சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுக்க கூடாது. பாரம்பரியமான முறையில் நடக்கும் விஷயங்களை தாராளமாக பின்பற்றி கொள்ளலாம். ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பு அமைதி, நல்லிணக்கத்தை பேணுவது குறித்து எடுத்து கூறுவதோடு அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் எழுதி வாங்க வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

நமாஸ் செய்ய அனுமதி
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவ கல்லூரி ரோட்டில் மசூதியின் முன்புள்ள ரோட்டில் ரமலான் மாதத்தையொட்டி இரவு 9 மணி முதல் 11 மணி வரை 5 நாள் நமாஸ் செய்ய முஸ்லிம்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடம் அவர்கள் அனுமதி பெற்றனர். மாவட்ட நிர்வாகம், போலீசாரும் அனுமதி வழங்கியது.

150 பேர் மீது வழக்கு
இதையடுத்து அனுமதியின்றி மசூதியின் முன்புள்ள சாலையில் நமாஸ் செய்ததாக 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 144யை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மசூதியின் மேலாளர் இர்பான் சலீம் கூறுகையில், ‛‛இங்குள்ள கடைக்காரர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் 40 ஆண்டுகளாக நமாஸ் செய்து வருகிறோம். ஆனால் இந்த முறை சிலரின் எதிர்ப்புகளால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications