உ.பி 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு..கடந்த தேர்தலில் 50 தொகுதிகளை அள்ளிய பாஜக..தற்போதைய நிலை என்ன?
லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள் மாநிலத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் நான்கு கட்ட தேர்தல் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன.

உபி சட்டசபை தேர்தல்
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத் தனது ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டுள்ள சாதனைகள் குறித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சூறாவளி பிரச்சாரம்
அவருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் உத்திரப்பிரதேசத்தில் முகாமிட்டு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.காங்கிரஸ் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உத்தரப் பிரதேச தேர்தல் களத்தில் இருந்தாலும் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு கடும் சவாலாக விளங்குகிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி. மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர அகிலேஷ் யாதவ் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜக செய்த தவறுகளையும் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி அகிலேஷ் யாதவ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

4ஆம் கட்ட வாக்குப்பதிவு
ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை மிகவும் விருப்புடன் நடைபெற்றது. மொத்தம் 9 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த தேர்தலில் 50 இடங்களில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது. சிறு சிறு சம்பவங்கள் தவிர மற்ற பகுதிகளில் அமைதியாக தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

57 சதவீத வாக்குப்பதிவு
மாலை 5 மணி நிலவரப்படி பண்டா பகுதியில் 57.48% வாக்குகளும், ஃபதேபூர் தொகுதியில் 56.96%, ஹர்தோய் தொகுதியில்55.40%, கெரி தொகுதியில் 62.45%, லக்னோ தொகுதியில் 54.98%, பிலிபித் தொகுதியில் 61.42%, ரேபரேலி தொகுதியில் 58.32%, சீதாபூர் தொகுதியில் 58.30% மற்றும் உன்னாவ் தொகுதியில் 54.12% வாக்குகளும் பதிவாகியுள்ளது. இவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலி அடங்கிய ரேபரேலி மாவட்டமும், 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டமும் அடங்கும்.












Click it and Unblock the Notifications