சிஎஸ்கே.. கிரிக்கெட் மைதானத்தில ஜாலியா படுத்துட்டே.. யார் பாருங்க பருத்திமூட்டை குடோன்லயே இருக்கலாம்
லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானத்திற்குள், நடந்த சம்பவ வீடியோ ஒன்று இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.. இதையடுத்து, யார் அந்த ரசிகர் என்று இணையவாசிகள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஐபிஎல்-லின் 16வது சீசன் தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.. லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

எப்படியாவது, பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று அணிகளும், தங்கள் பலத்தை நிரூபித்து வருகின்றன.. முதல் 4 இடங்களை பெறப்போவது யார் என்று தெரியவில்லை. அவர்களே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவார்கள்..
சூப்பர் கிங்ஸ்: நேற்று நடந்த போட்டியில், டெல்லி அணி முதல் அணியாக பிரீமியர் லீக் தொடரில் இருந்து வெளியேறியது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இப்போதைக்கு புள்ளிகளில், முதல் 4 இடங்களை தக்க வைத்துள்ளன..
இந்த முறை ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பேயே, ரசிகர்களிடம் ஆர்வமும், எதிர்பார்ப்பும் பெருகியது.. அதனால்தான், கிரிக்கெட்டை பார்ப்பதற்காக ஒவ்வொரு, போட்டியுலும் ரசிகர்கள் கூட்டத்தையும் பொருட்படுத்தாது காண ஆர்வம் காட்டுகிறார்கள்.. காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை துவங்குகிறது என்றால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நள்ளிரவு முதலே வரிசையில் ரசிகர்கள் காத்து நிற்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.. எனினும் நிறைய பேருக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. எனவே, ஆங்காங்கே பொருமலும், அதிருப்தியும் வெடித்தபடியே உள்ளன.
வாஜ்பாய் மைதானம்: இப்படிப்பட்ட சூழலில், வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல்பிஹாரி வாஜ்பாய் மைதானத்திற்குள் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.. ஆனால், எந்த போட்டியில் இது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.. அங்கு நிறைய சீட்டுகள் காலியாக இருந்துள்ளன.. அப்படி காலியாக இருந்த கடைசி வரிசை இருக்கையில், ஒரு ரசிகர் படுத்தப்படியே கிரிக்கெட் போட்டியை ரசித்து பார்க்கிறார். ஆனால், செல்போனில் பார்த்து ரசிக்கிறார்.
யாரு சாமி இவன்: விளையாட்டு போட்டி நடக்கும் மைதானத்திலேயே இருந்துக்கொண்டு, காலியாக சேர்கள் இருந்தாலும்கூட, படுத்து கொண்டு செல்போனில் கிரிக்கெட் போட்டியை பார்க்கிறார்.. இதை அங்கிருந்த ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து, ட்விட்டரிலும் பகிர்ந்துவிடவும், இதுதான் இப்போது இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. சுமார் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் இந்த வீடியோவை இப்போதுவரை பார்த்துள்ளனர்.. இதை பார்த்த நெட்டிசன்கள், 'இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லேயே இருந்திருக்கலாமே', "யாரு சாமி இவன்" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications