"இது எனது அதிர்ஷ்டம், நீண்ட நாள் ஆசை" அயோத்தி அனுமன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு ரஜினிகாந்த் பேட்டி
லக்னோ: அயோத்தியில் உள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த், இந்த கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்றார்.
இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். இந்தப் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பட வேலைகள் முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். கொரோனா வைரஸ் காரணமாக ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், நடப்பு ஆண்டு இமயமலை புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் தனது பயணம் முடிந்த பிறகு தமிழ்நாடு திரும்புவார் என அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினிகாந்த் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்ற ரஜினிகாந்த் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து ஜார்கண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
ஜார்க்கண்ட் பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரப்பிரதேசம் சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த்,வரவேற்க வாசலுக்கு வந்த யோகியின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்ககளிலும் வேகமாக பரவியது. தன்னை விட வயது குறைந்த யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி பெற்றதற்கு கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இன்று உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலெஷ் யாதவை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பிக்கு பிறகு அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், மைசூரில் படிக்கும் போது, ரஜினியை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே உள்ளது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்" எனக் கூறியிருந்தார்.
சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார். அதன்பிறகு அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் சென்று இருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், "இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம்" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications