கன்பர்ம்ட்.. கனிகாவுக்கு 3வது டெஸ்ட்டிலும் கொரோனா உறுதி.. அதிர வைத்த சோதனை.. இன்னும் அடங்கலியே அவர்!
கனிகா கபூருக்கு 3வது டெஸ்ட்டிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
லக்னோ: அடங்காமல் ஆட்டம் போட்டு கொண்டிருந்த கனிகாவுக்கு 3வது முறை கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.. தொற்று இருப்பதும் மீண்டும் உறுதியாகி உள்ளது!
Recommended Video
உபியை சேர்ந்த கனிகா கபூர்... பிரபலமான பாலிவுட் பாடகி.. இவர் சமீபத்தில் லண்டனுக்கு சென்று நாடு திரும்பினார்.. லண்டனுக்கு போய்வந்ததுடன், 3 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதற்கு பிறகு டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார்.
அந்த நேரம் இஷ்டத்துக்கும் வெளியே சென்று ஷாப்பிங் செய்திருக்கிறார்... இதன்பிறகுதான் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போகவும் ஆஸ்பத்திரிக்கு செக்-அப்புக்கு போனார்.

பாதிப்பு
அப்போது டாக்டர்கள் உரிய பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அங்கு அவர் ஒரு நோயாளி போலவே இல்லை என்றும், ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு போதுமான ஒத்துழைப்பு அளிக்காமல் அட்டகாசம் செய்வதாகவும் புகார் எழுந்தது.

வாழைப்பழம்
"ஒரு ஸ்டாராக இல்லாமல் நோயாளியாக நடந்து கொள்ளுங்கள்" என்று கனிகாவிடம் அந்த மருத்துவமனை டைரக்டர்கூட அறிவுறுத்தி இருந்தார்.. அப்போதும் கனிகாவின் சேட்டை குறையவில்லை.. "என் ரூம் கிளீனாகவே இல்லை.. ஜெயில் மாதிரி இருக்கு.. சாப்பிடறதுக்கு 2 வாழைப்பழம்தான் தந்தாங்க... அதுகூட ஈ மொய்த்தது.. பசியிலதான் இருந்தேன்.. எனக்கு மருந்தும் தரல.. ஒழுங்கான சிகிச்சையும் தரல... என்று வெளிப்படையாக பேட்டி தந்துவிடவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் அதிருப்தி ஆனது.

கைது
வெளிநாடு போய் வந்ததும் இல்லாமல், வைரஸ் டெஸ்ட் பண்ணின விஷயத்தையும் வெளியே சொல்லாமல், ஆஸ்பத்திரியிலும் அடங்காமல் உள்ளதால் சோஷியல் மீடியாவில் எல்லாரும் கனிகாவை திட்டி தீர்த்து வருகிறார்கள்... கனிகாவால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால், கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தபடியே உள்ளன.

பாசிடிவ்
இந்நிலையில் கனிகாவுக்கு 3வதுமுறை கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.. முதலில் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சொன்னார்கள... ஆனால் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் உறுதி செய்யப்பட்டது.. இப்போது 3வது முறையாகவும் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள்.. இதிலும் அவருக்கு பாசிடிவ் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கனிகாவை மொத்தமாக பீடித்துள்ளதால் தீவிர கண்காணிப்பும், சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications