Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசைவ உணவை விற்க எதிர்ப்பு.. KFC-யை மூடிய இந்து அமைப்பினர்.. உத்தர பிரதேசத்தில் பரபரப்பு - பின்னணி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் செயல்பட்டு வரும் கேஎஃப்சியில் அசைவ உணவு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து ‛இந்து ரக்ஷா தளம்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இழுத்து மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் சவான் மாதம் தான் உள்ளது. இந்த மாதம் என்பது என்ன?

இந்து காலண்டரின்படி சவான் (Sawan) மாதம் புனித மாதமாக வடமாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது சிவனுக்கு உகந்த மாதமாகும். தற்போது கடந்த 11ம் தேதி சவான் மாதம் பிறந்தது. ஆகஸ்ட் 9 ம் தேதி சவான் மாதம் முடிவுக்கு வர உள்ளது.

kfc-outlet-which-is-selling-meat-during-swwan-month-now-shut-down-by-hindu-outfit-in-uttar-pradesh

இந்நிலையில் தான் சவான் மாதத்தில் அசைவ உணவு எதிர்ப்பு தெரிவித்து இன்று உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கேஎஃப்சி விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அந்த கேஎஃப்சியின் ஷட்டரை இழுத்து அடைத்தனர்.

காசியாபாத்தில் இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் தான் ‛ஜெய் ஸ்ரீராம்.. ஹர ஹர மாகாதேவா' கோஷத்துடன் சென்று கேஎஃப்சியை இழுத்து அடைத்தனர். மேலும் கேஎஃப்சி முன்பு நின்று அவர்கள் அசைவ உணவு விற்பனை செய்யக்கூடாது என்று கோஷமிட்டனர்.

அதேபோல் அந்த பகுதியில் உள்ள நசீர் எனும் உணவகத்தின் முன்பும் இந்து அமைப்பினர் சென்று போராட்டம் நடத்தினர். சவான் மாதத்தில் அசைவ உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கோஷமிட்டனர். இதையடுத்து அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+