கடவுள் கிருஷ்ணர் பிடிவாதக்காரர்.. மதுரா ஜென்மபூமி குறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சூசக பேச்சு
லக்னோ: உத்தர பிரதேசம் மதுராவில் இந்து கோவிலை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் கூறி வரும் நிலையில் இது தொடர்பாக வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில், மதுரா கிருஷ்ண ஜென்ம்பூமிதான் என்பதை சூசகமாக வெளிப்படுத்தும் விதமாக யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
பாபர் மசூதி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து மசூதியின் ஒருபகுதியில் இந்துக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: இது ஒருபக்கம் இருக்க உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்ததாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கு கேஷவ் தேவ் கோவில் இருந்ததாகவும், அது முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கடந்த 1669 - 79 காலக்கட்டத்தில் இடிக்கப்பட்டு, ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொல்லியல் ஆய்வுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிருஷ்ணர் பிடிவாதமாக உள்ளார்: இந்த நிலையில், பாஜகவின் அடுத்த முன்னுரிமை பட்டியலில் இருப்பது மதுரா கிருஷ்ண ஜென்ம்பூமிதான் என்பதை சூசகமாக வெளிப்படுத்தும் விதமாக யோகி ஆதித்யநாத் இன்று கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறுகையில், அயோத்தியில் நடைபெற்ற கொண்டாட்டத்தை பார்த்த நந்தி பாபா, பிடிவாதத்துடன் தடுப்புகளை இரவில் உடைத்தெறிந்துள்ளார். தற்போது நமது கிருஷ்ணரும் பிடிவாதமாக உள்ளார்" என்றார். உத்தர பிரதேச சட்டமன்றத்தில் பேசுகையில், இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
நந்தி பாபா என்று கடவுள் சிவனை குறிப்பிட்டுள்ளார். நந்தி என்பது காளையை குறிக்கிறது. காளை என்பது சிவனின் வாகனம் என்று புராண இதிகாசங்களின் படி நம்பப்படுகிறது. எனவே தான் நந்தி பாபா என்று கடவுள் சிவனை யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார். கடந்த வாரம் ஞானவாபி மசூதிக்குள் ஒரு பகுதிக்குள் இந்துக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதையே யோகி ஆதித்யநாத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications