Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ashish Mishra: லக்கிம்பூர் வன்முறை: ஆசிஷ் மிஸ்ரா குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜர்

அசிஷ் மிஸ்ரா இன்று காலை 11 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்புர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணைக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார். போலீஸ் 2-வது முறையாக சம்மன் அனுப்பியநிலையில் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகி உள்ளார்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடங்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன..

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று வருகின்றனர்.

 சிறப்பு விருந்தினர்

சிறப்பு விருந்தினர்

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி லக்கிம்பூர் கேரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்... ஆனால், பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டி விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர்...

விவசாயிகள்

விவசாயிகள்

அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதலும் வன்முறையும் வெடித்தது.. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்... இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்... இந்த வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.. இது உபியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த வன்முறை சம்பவத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதுதொடர்பாக மாநில அரசு 2 பேரை கைது செய்தது... மேலும் 8 பேர் கொண்ட காவல்படையையும் அமைத்தது. வன்முறை தொடர்பாக உத்திரபிரதேச போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்மன்

சம்மன்

இது தொடர்பாக 2 தினங்களுக்கு முன்பு அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவிடம் போலீஸார் அவர் வீட்டுக்கு சென்றனர்.. ஆனால் அவர் அங்கு இல்லை.. அதனால் அவருக்கு சம்மனையும் அனுப்பி வைத்தது.. ஆனால், ஆசிஷ் மிஸ்ரா அன்றைய தினம் ஆஜராகவில்லை... அவருக்கு பதிலாக அவரது அப்பா விளக்கம் தந்திருந்தார்.. அதில், என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார் என்று கூறியிருந்தார்.

 2வது சம்மன்

2வது சம்மன்

இந்த வழக்கை தானாகவே வந்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது..மேலும், இந்த விவகாரத்தில் நேற்றைய சுப்ரீம்கோர்ட் விசாரணையின்போதும், உத்தரப் பிரதேச அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே தரப்பிலும் இன்று வரை ஆசிஷ் மிஸ்ராவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்திருந்து இருந்தார்... இந்த நிலையில், இணை அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா நேற்று காலை 11 மணிக்கு ஆஜராக கோரி உத்தரப் பிரதேச போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஆனால், சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தினால், மீண்டும் 2வது முறையாக ஆஜராக கோரி சம்மன் ஒட்டப்பட்டது.. உபியில் உள்ள அவரது வீட்டில், இன்று காலை 11 மணிக்கு ஆஜராக கோரி இரண்டாவது சம்மனை போலீசார் ஒட்டியிருந்தனர்.. அதன்படி, வழக்கு விசாரணைக்கு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார்.. போலீஸ் 2-வது முறையாக சம்மன் அனுப்பியநிலையில் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா தற்போது ஆஜராகி உள்ளார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.. விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+