லக்கிம்பூர் கேரி தாக்குதல்.. நீதி கிடைக்கவில்லை.. மீண்டும் போராட்டதைத் தொடங்கிய விவசாயிகள்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் 'லக்கிம்பூர் கேரி' பகுதியில் விவசாய சங்கத்தினர் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பேராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
'சம்யுக்த் கிஸான் மோர்ச்சா' விவசாய சங்கத்தின் சார்பாக 72 மணி நேர தொடர் போராட்டமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'லக்கிம்பூர் கேரி' சம்பவத்தில் நீதி வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாபை சேர்ந்த 10,000 விவசாயிகள் இந்த போராட்டத்தை தொடர உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கார் ஒன்று உள்ளே புகுந்ததில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் சுமார் 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விவசாயிகள் மீது மோதிய கார் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடையது என குற்றம்சாட்டப்பட்டது. இந்த காரில் சம்பவத்தின் போது ஆஷிஷ் காரினுள் இருந்தாதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இது தொடர்பான வழக்கில், ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் தொடர்ந்த ஜாமீன் மனுவையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விவசாயி ஒருவர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை தள்ளுபடி செய்தும், ஒரு வாரக்காலத்திற்குள் அவர் காவல் நிலையத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் மீதமுள்ள அம்சங்களுக்கு அலகாபாத் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் வழிகாட்டியது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா சரணடைந்தார். தற்போது அவர் லக்கிம்பூர் கேரியில் உள்ள சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 'பாரதி கிசான் யூனியன்' (தோபா) தலைவர் மஞ்சித் சிங் ராய் இது குறித்து கூறுகையில், "பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 10,000 விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். இவர்கள் ரயில்களிலும், சிலர் சொந்த வாகனங்களிலும் போராட்ட பகுதிக்கு வந்து சேருவார்கள்" என்று கூறியுள்ளார். லக்கிம்பூர் கேரியில் இறந்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளதாகவும் ராய் கூறியுள்ளார்.
மேலும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் இதர கோரிக்கையாக முன்வைத்துள்ளனர். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதேபோல வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications