முட்டு சந்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி.. கரை சேர்த்த பிரியங்கா.. இந்திரா பேத்தியாக மாறிய தருணம்
லக்னோ: இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி என்பது முட்டுச்சந்தில் நின்றது. கூட்டணி உடையும் என கூறப்பட்ட நிலையில் தற்போது தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி இருப்பதும், அவரது சாமர்த்தியம் தான் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியை உறுதி செய்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கின. இதில் பீகார் முதல்வரான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வெளியேறி உள்ளது. ‛இந்தியா' கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார்.

அதேபோல் உத்தர பிரதேசத்தில் செயல்பட்டு வந்த ஆர்எல்டி எனும் கட்சியும் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து ஓட்டம் பிடித்து பாஜகவுடன் சேர்ந்துள்ளது. இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் மட்டும் தான் அதிக நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன
உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால் எளிதாக மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும்.
தற்போதைய சூழலில் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு 62 எம்பிக்கள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 எம்பிக்கள் சமாஜ்வாதிக்கு 5 எம்பிக்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி, ஏடிஎஸ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது.
தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து ஆர்எல்டி கட்சி வெளியேறி உள்ள நிலையில் சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் உள்ளது. இந்த கட்சிகள் தான் 80 தொகுதிகளை பங்கிட்டு கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே ஈகோ பிரச்சனை என்பது இருந்தது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது நீண்டகாலமாகவே தொடங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தான் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். மேலும் அவர் தான் ராகுல் காந்திக்கும், அகிலேஷ் யாதவுக்கும் பாலமாக இருந்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல் காந்தியிடம் விவாதித்தபிறகு அதுபற்றி அகிலேஷ் யாதவிடம் பிரியங்கா காந்தி பேசியுள்ளார். இந்த வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அகிலேஷ் யாதவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனாலும் கூட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரடாபாத், பாலியா மற்றும் பிஜ்னூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் போட்டியிட விரும்புகின்றனர். இந்த 3 தொகுதிகளை விட்டுக்கொடுக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை. அதேபால் காங்கிரஸ் கட்சியினரும் இந்த தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வரவில்லை. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் நேற்று வரை இழுபறி நீடித்தது.
இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சிகள் இடையே சுமூகமாக தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் களமிறங்க உள்ளது. சமாஜ்வாதி கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் உத்தர பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி, பிரயாக்ராஜ், வாரணாசி, மகாராஜ்கஞ்ச், தியோரியா, பான்ஸ்கான், சீதாபூர், அம்ரோஹா, புலந்த்ஷாஹர், காசியாபாத், கான்பூர், ஜான்சி, பாரபங்கி, ஃபதேபூர் சிக்ரி, சஹாரன்பூர், மதுரா ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் இந்த 17 தொகுதிகள் தான் காங்கிரஸ் கட்சிக்கு சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உள்ளது. இதனால் உத்தர பிரதேசத்தில் ‛இந்தியா' கூட்டணி நிலைக்குமா? சிதறுமா? என்ற கேள்விகளும் எழுந்தன. இத்தகைய சூழலில் தான் தற்போது ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சியை இணைத்த மிகப்பெரிய வேலையை பிரியங்கா காந்தி செய்துள்ளார். தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்தால் பிரச்சனை என்பது அதிகரிக்கும் என்பதை பிரியங்கா காந்தி உணர்ந்திருந்தார்.
மேலும் அதே வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு உத்தர பிரதேச மாநிலம் எவ்வளவு முக்கியமான மாநிலம் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருந்தார். அதோடு உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதையும், கடந்த தேர்தலில் தங்கள் குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் அண்ணன் ராகுல் காந்தி தோற்றதும், தாய் சோனியா காந்தி மட்டுமே ரேபரேலியில் வென்றதை அவர் உணர்ந்திருந்தார்.
மேலும் இந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தில் கணிசமான இடங்களில் காங்கிரஸ் பெற வேண்டும் என அவர் நினைக்கிறார். தற்போதைய சூழலில் உத்தர பிரதேசத்தில் தனித்த போட்டியிட்டால் அது சாத்தியமாகாது. ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடப்பது, அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட உள்ளிட்ட விஷயங்கள் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.
இந்த வேளையில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைப்பது மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு பலமாக அமையும். இதற்காக சில தொகுதிகளை தியாகம் செய்யலாம் என பிரியங்கா காந்தி நினைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தாய் சோனியா காந்தி எம்பியாக இருக்கும் ரேபரேலி மற்றும் அண்ணன் ராகுலின் அமேதி தொகுதியில் வெல்வது என்பது சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு இருந்தால் எளிமையாக இருக்கும் எனவும் பிரியங்கா காந்தி நினைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரே சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். அதன்பிறகு பிற தலைவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக விவாதித்தனர். இந்த வேளையிலும் மொரடாபாத், பாலியா, பிஜ்னூர் உள்ளிட்ட 3 தொகுதிகள் தொடர்பாக இருகட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பிரியங்கா காந்தி தலையிட்டு தான் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதிகளுக்கு பதில் சீதாபூர், ஷ்ரவஸ்தி மற்றும் வாரணாசி ஆகிய தொகுதிகளை கேட்டு அதில் சீதாபூர், வாரணாசி தொகுதிகளை வாங்கி வெற்றி கண்டு உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்கள் பாஜகவுக்கு பலமாக இருக்கிறது. அதேவேளையில் தற்போது காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து இருப்பது என்பது பாஜகவுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் இருகட்சிகளுக்கும் கட்டமைப்பு என்பது உள்ளது. இது பாஜகவுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தலாம். இதனை அறிந்தே மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை போன்று சாமர்த்தியாக அவரது பேத்தி பிரியங்கா காந்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications