கனவில் கடவுள் வந்து சொன்னார்! உ.பியில் யோகிதான் மீண்டும் முதல்வர்! பாஜக எம்பி ஹர்நாத் சிங் ஆருடம்
லக்னோ: ‛‛தற்போதைய கருத்து கணிப்புகள் தற்செயலானவை அல்ல. என் கனவில் வந்த கடவுள் கிருஷ்ணன், உத்தர பிரேதேசத்தில் யோகி ஆதித்யநாத் தான் ஆட்சி அமைப்பார்'' என கூறியதை எதிரொலிக்கிறது என்று பாஜகவின் எம்பி ஹர்நாத் சிங் கூறினார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளது. இந்நிலையில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களுடன் சேர்த்து உத்தர பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. இறுதிக்கட்ட தேர்தல் நேற்று பதிவானது. இந்த ஓட்டுகள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பாஜகவுக்கு வெற்றி
இதற்கிடையே நேற்று ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் உத்தர பிரதேசத்தில் பாஜக சுமார் 300 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டது. இதன்மூலம் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியும். இதனால் பாஜகவினர் உற்சாகமாக உள்ளனர்.

காங்கிரசுக்கு பெருத்த அடி
மேலும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி 100 முதல் 110 தொகுதிகளிலும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் 2 முதல் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு நிலவரங்கள் இருந்தன. இதன்மூலம் சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சியாக செயல்படும். கடந்த தேர்தலைபோல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் பெருத்த அடி விழும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கனவில் வந்த கிருஷ்ணன்
இந்நிலையில் தான் கடவுள் கிருஷ்ணன் தனது கனவில் வந்து உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என கூறியதாக பாஜகவின் எம்பி ஹர்நாத் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று கூறியதாவது: ‛‛தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்பு முடிவுகள் தற்செயலானவை அல்ல. நேற்று இரவு கடவுள் கிருஷ்ணன் என் கனவில் மீண்டும் வந்தார். அவர் கூறும்போது, ‛யோகியால் எனது பணியை மேற்கொள்ள முடியாது. யோகி என்மீது அதிக மரியாதை வைத்துள்ளார். யோகியே ஆட்சியை அமைப்பார்' என்றார். கடவுள் கிருஷ்ணாவின் ஆசீர்வாதத்தை யாராலும் தடுக்கவோ, மறுக்கவோ முடியாது. யோகி ஆதித்யநாத் ஆட்சியை பிடிப்பது உறுதி. சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். இது அவர்களின் பேச்சில் தெரிகிறது. '' என்றார்.

மதுராவில் போட்டியிட...
முன்னதாக ஜனவரி 3ல் ஹர்நாத் சிங் யாதவ் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‛‛இந்த கடிதம் கடவுள் கிருஷ்ணாவின் உந்துதலால் எழுதியிருக்கிறேன். உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத்தை மதுரா தொகுதியில் நிறுத்த பரிசீலிக்க வேண்டும்'' எனக்கூறியிருந்தார். மேலும், யோகி ஆதித்யநாத்தை தான் பிறந்த மதுராவில் போட்டியிட வைக்கும்படி கடவுள் கிருஷ்ணன் கூறியதாக தெரிவித்து இருந்தார். ஆனால் இது நடக்கவில்லை. சட்டசபை தேர்தலில் மதுரா தொகுதிக்கு பதில் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications