உபியில் பயங்கரம்! வீட்டை காலி செய்ய மறுத்த தாயை தீ வைத்து எரித்த மகன்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வீட்டை விட்டு காலி செய்ய மறுத்த 60 வயது தாயை மகன் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் முக்தாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மஹாஜன் சோன்கர் (35). திருமணமான இவர் தனது மனைவி மற்றும் 60 வயது தாய் ராஜகுமாரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசிக்க வேண்டும் எனக்கூறி, தாய் ராஜகுமாரியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி வந்தார். ஆனால், ராஜகுமாரி வீட்டிலிருந்து செல்லவில்லை. இது தொடர்பாக தாயிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்த சோன்கர் மகாஜன், கடுமையான குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
தனது தாய் வீட்டைவிட்டு வெளியேறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சொல்லி முதலில் தனது மனைவிக்கு விஷம் கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவர் விஷம் அருந்த மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகாஜன் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை கண்ட சோன்கரின் தாய் ராஜகுமாரி தனது மகனை தடுக்க முயற்சித்து இருக்கிறார்.
அவரையும் தாக்கிய சோன்கர், தாய் என்றுகூட பார்க்காமல் தீ வைத்து எரித்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தாயையும் மகனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கை விசாரித்து வரும் போலீஸ் ஆய்வாளர், ஆராய் அஜர் சேத் தெரிவிக்கையில், "மிர்சாப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகுமாரிக்கு பலத்த தீ காயங்கள் ஏற்பட்டதால் உயர்சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரம் வாரணாசி தனியார் மருத்துவமனையில் மகாஜன் உயிருக்கு போராடி வருகிறார்." என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications