சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரியில் பயங்கர தீ விபத்து.. அடுத்த நொடி நடந்த விபரீதம்.. உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தர பிரதேசம் காசியாபாத் அருகே கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கிமீ தூரம் தெரிந்துள்ளது. தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை காயம் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே லாரி ஒன்று எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. இன்று அதிகாலையில் போபுரா சவுக் அருகே சென்ற போது திடீரென லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறின. நாலாபுறமும் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள வீடு, ஓட்டல் என நாலாபுறமும் சிலிண்டர்கள் வெடித்து பறந்தன. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்து கண் விழித்தனர். மேலும் விபத்தை பார்த்தை பெரும் பீதியடைந்தனர். சுமார் 3 கிமீ தூரத்துக்கு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம் தெரிந்துள்ளது.
உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியதால் தீயணைப்பு துறையினரால் அருகே செல்ல முடியாத சூழல் இருந்தது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துகான காரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா, உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகாலையில் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவியது.












Click it and Unblock the Notifications