அட.. தேர்தலுக்கு பின் இதுதான் நடக்குமா? உ.பியில் இப்போதே அறிகுறி தெரியுதே.. மாயாவதியின் பிளான்!
லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி எப்படி அமையும் என்பது குறித்து உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லக்னோ: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி எப்படி அமையும் என்பது குறித்து உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது.

நெருக்கம்
இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மிக மிக நெருக்கமான கூட்டணியை அமைத்து இருக்கிறது என்று கூட கூறலாம். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பல வருட எதிரிகளான மாயாவதியும், முலாயம் சிங் யாதவும் ஒரே மேடையில் அமர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். முலாயம் மிக சிறந்த தலைவர் என்று மாயாவதியே அந்த பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

கன்னாஜ் பிரச்சாரம்
இன்று உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் தொகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அதற்கும் ஒருபடி மேல் போய் அகிலேஷ் யாதவ், மாயாவதியை புகழ்ந்து தள்ளினார். மாயாவதி அரசியலில் சிறந்த அறிவு கொண்டவர். இந்த கூட்டணி இத்தனை நெருக்கமாக மாறுவதற்கு காரணம் மாயாவதிதான். இந்த கூட்டணிதான் பிரதமரை தேர்வு செய்ய போகிறது.

சூப்பர் கூட்டணி
சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணிதான் நமது நாட்டிற்கு புதிய பிரதமரை அளிக்க போகிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று குறிப்பிட்டார். அங்கு அகிலேஷ் யாதவ் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவரின் மனைவி டிம்பிள் யாதவ் மாயாவதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதுதான் தற்போது பெரிய விவாதம் ஆகியுள்ளது.

மாயாவதி திட்டம்
அதன்படி மாயாவதி நாட்டின் அடுத்த பிரதமராக திட்டமிட்டுவிட்டார். அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச முதல்வராக ஆசைப்படுகிறார். அதனால் மாயாவதி பிரதமர் ரேஸுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதனால்தான் அகிலேஷ் யாதவ் இப்படி பேசுகிறார் என்று கூறுகிறார்கள். முலாயம் - மாயாவதி நெருக்கமானதற்கும் இது ஒரு காரணம் என்கிறார்கள்.

ஆனால்
இந்த லோக்சபா தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை. தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் அவர் போட்டியிடவில்லை என்றுள்ளார். அதே சமயம் பிரதமராவதற்கு தேர்தலில் போட்டியிட வேண்டியதில்லை. பிரதமர் ஆன பின் கூட தேர்தலில் நிற்கலாம் என்று அவர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications