25 வயது மருத்துவ மாணவி மர்ம மரணம்.. தலை, கழுத்தில் காயம்.. மருத்துவரை கைகாட்டும் உறவினர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் லக்னோவிலிருந்து 220 கி.மீ. தூரத்தில் உள்ள ஜலான் நகரில் உள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்தவர் 25 வயது மருத்துவ மாணவி. இவர் லக்னோவிலிருந்து 220 கிமீ தூரத்தில் உள்ள கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். இவரை செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மகளை காணவில்லை என கூறி போலீஸில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து போலீஸார் அந்த பெண்ணைத் தேடி வந்தனர்.

கல்லூரி
இந்த நிலையில் அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கு அருகில் அவரது உடல் சடலமாக நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

தலை
அதில் அந்த பெண்ணிற்கு தலையிலும் கழுத்திலும் பயங்கர காயங்கள் இருந்தன. அந்த காயங்களை பார்க்கும் போது அவர் உயிரை காத்து கொள்ள மிகவும் போராடியுள்ளது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

மருத்துவர்
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் எங்கள் பெண்ணை ஜலானில் உள்ள மருத்துவர் ஒருவர் கொடுமைப்படுத்தி மிரட்டி வந்துள்ளதாக எங்கள் மகளே சொல்லியுள்ளார் என புகார் அளித்தனர். இதையடுத்து அந்த மருத்துவரை விசாரணைக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.

சிறுமி
கடந்த சில வாரங்களாக உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் கரும்பு காட்டுக்குள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தொடர் குற்றங்கள் நடந்து வருவது, பெண்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications