ஒரே நேரத்தில் 500க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள்.. அரசுப்பணி வழங்கும் உ.பி. அரசு.. யோகி அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்ப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மாநில காவல்துறை மற்றும் வேறு பல நிர்வாகத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீரர்களுக்கு மாநில அரசு சார்பாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரஞ்சி டிராபி கிரிக்கெட் வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்கள் என பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள், கலந்துகொண்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், மிதாலி ராஜ், ஜோஹிந்தர் சர்மா என ஏராளமான விளையாட்டு வீரர்கள் அரசுப் பணிகள் செய்துள்ளனர்.

More than 500 sportspersons to get government jobs says UP Chief Minister Yogi Adityanath

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 71வது அனைத்து இந்திய காவல்துறை தடகள கிளஸ்டர் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்க உள்ள விளையாட்டுப் போட்டிகளில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், உத்தரப் பிரதேசத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் அனைத்து இந்திய காவல்துறை தடகள கிளஸ்டர் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியுள்ளாது. 32 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளதால், சாம்பியன்ஷிப் தொடர் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், நமது நாட்டில் விளையாட்டு போட்டிகள் ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள், ஆசியப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, பதக்கங்களையும் வெல்ல தொடங்கியுள்ளோம். அதேபோல் சன்சாத் கேல் மஹோத்சவா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேர் விளையாட்டு போட்டிகளுடன் தொடர்பை உருவாக்கியுள்ளனர்.

அதேபோல் மாநிலத்தின் பல்வேறு கிராமங்களிலும் சிறிய மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் விளையாட்டுக் கல்லூரிகளில் மைதானங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மாநில அரசு தரப்பில் பணிகள் வழங்கப்பட உள்ளது. காவல்துறை உள்ளிட்ட இன்னபிற நிர்வாகத்துறைகளில் பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+