கொடுமை.. இந்து கோயிலில் தண்ணீர் குடித்த முஸ்லிம் சிறுவன்.. கொடூரமாக தாக்கிய கும்பல்!
14 வயது முஸ்லிம் சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
லக்னோ: தாகத்துக்கு தண்ணீர் குடிக்க வந்த முஸ்லிம் சிறுவனை, கோயிலுக்குள் வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட அக்கிரமம் உத்தரபிரதேசத்தில்தான் நடந்துள்ளது.
Recommended Video
நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது..
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் சூழலில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில், மதரீதியான மோதல்களும் தலைதூக்கி வருகின்றன.

கோயில் குழாய்
அந்த வகையில் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. காசியாபாத் மாவட்டத்தில் தாசனா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசிக்கும் 14 வயது இஸ்லாமிய சிறுவனுக்கு திடீரென தாகம் எடுத்துள்ளது.. அதனால்,அந்த பகுதியில் இருந்த ஒரு கோயில் குழாயில் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார்..

சிறுநீர்
அப்போது, ஷிரங்கி நந்தன் யாதவ் என்பவர், சிறுவன் தண்ணீர் குடிப்பதை பார்த்து விட்டார். பெயர் என்ன என்று கேட்டுள்ளார்.. பெயரை சிறுவன் சொன்னதும் ஆவேசமான யாதவ், கண்மூடித்தனமாக சிறுவனை தாக்கி உள்ளார். இதை அந்த பகுதியில் இருந்தோர் அனைவருமே வேடிக்கை பார்த்துள்ளனர்.. சிலர் வீடியோவும் எடுத்தனர்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

கண்டனம்
யாதவ்க்கு எதிரான கண்டனங்களும் எழுந்தன.. இதையடுத்து போலீசார் வீடியோ அடிப்படையில் விசாரணையை ஆரம்பித்தனர். கோயிலில் இருந்த சிவலிங்கத்தின் மீது சிறுவன் சிறுநீர் கழிக்க முயன்றாலேயே சிறுவனை தாக்கியதாக யாதவ் காரணம் சொல்லி உள்ளார்.. இறுதியில், கடந்த 13-ம் தேதி யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சிவானந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கோரிக்கை
எனினும் 2 பேருமே விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த சம்பவத்துக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையமும், மாநில குழந்தைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நடந்த சம்பவத்துக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications