லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹத்ராஸ் தலித் பெண்ணுக்கும் பலாத்கார குற்றவாளிக்கும் இடையே போனில் தொடர்பு.. சொல்கிறது உ.பி. போலீஸ்

Google Oneindia Tamil News

லக்னோ: ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்தில் இறந்த பெண்ணுக்கும் பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளிக்கும் இடையே தொலைபேசி தொடர்பு இருந்ததாக உத்தரப்பிரதேச போலீஸார் கூறுகிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நாடு எங்கும் கண்டனங்கள் குவிகின்றன.

இந்த நிலையில் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீஸாரே பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

ஹத்ராஸ் குற்றவாளிகள் அப்பாவிகள்.. அந்த பெண் சரியில்லை- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு ஹத்ராஸ் குற்றவாளிகள் அப்பாவிகள்.. அந்த பெண் சரியில்லை- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

குற்றவாளி

குற்றவாளி

இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அந்த இறந்த பெண், அவரது குடும்பத்தினர், கைது செய்யப்பட்ட சந்தீப் ஆகியோரின் தொலைபேசி எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

2019ஆம் ஆண்டு

2019ஆம் ஆண்டு

அதில் பல திடுக் தகவல்கள் கிடைத்ததாக போலீஸார் கூறுகிறார்கள். அதாவது சந்தீப்பிற்கும் இறந்த அந்த பெண்ணிற்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்து வந்ததாக கூறியுள்ளார்கள். மேலும் இந்த பேச்சுவார்த்தை அக்டோபர் 13, 2019-ஆம் ஆண்டு முதல் தொடங்கியதாம்.

62 அவுட் கோயிங்

62 அவுட் கோயிங்

இருவருக்குமிடையே 104 தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன. அதில் 62 அவுட்கோயிங், 42 இன்கம்மிங் ஆகும். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளார்கள். இந்த உரையாடல்கள் 15 நிமிடங்களுக்கும் மேல் நீடித்ததாகவும் கூறுகிறார்கள்.

15 நிமிடங்கள்

15 நிமிடங்கள்

அது போல் பெண்ணின் குடும்பத்தினருடனும் சந்தீப் தொலைபேசியில் உரையாடியது தெரியவந்தது. இவர்களும் 15 நிமிடங்களுக்கு மேல் பேசியுள்ளது தெரியவருகிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் என போலீஸார் கூறுகிறார்கள்.

English summary
New twist in Hathras Gangrape case that 104 telephonic conversation between Victim and accused from 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X