Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்னும் இருபதே மாசம்.. அமெரிக்காவுக்கு நிகராக உ.பி சாலைகள் மாறும் பாருங்க!" அமைச்சர் நிதின் கட்கரி

உத்தரப் பிரதேசத்தில் ₹6,500 கோடி மதிப்பிலான ஏழு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அடுத்தாண்டு இறுதிக்குள் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் சாலை உட்கட்டமைப்புகள் அமெரிக்காவைப் போல மாறும் என்றும் இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. அங்கு இப்போது பல்வேறு சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ₹6,500 கோடி மதிப்பிலான கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை உட்பட ஏழு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

2024ஆம் ஆண்டு இறுதிக்குள், உத்தரப் பிரதேசத்தில் அமெரிக்காவைப் போன்று சாலைக் கட்டமைப்புகள் இருக்கும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "நான் சொன்னதைச் செய்வேன். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இத்திட்டங்களுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் சூழல் மாறும்.. எப்போதும் சாலைகள் மூலமே வளர்ச்சி ஏற்படும். ​இப்போது ​பல்லியாவிலிருந்து பாட்னாவை அடைய நான்கு மணி நேரம் ஆகிறது.. இந்த கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டால், ஒரு மணி நேரத்தில் பாட்னாவை அடைய முடியும்.

நெடுஞ்சாலைகள்

நெடுஞ்சாலைகள்

2014இல் பார்த்தோம் என்றால்.. உத்தரப் பிரதேச சாலைகளின் நிலை மோசமானதாக இருந்தது.. அப்போது உத்தரப் பிரதேசத்தில் 7,643 கி.மீ தேசிய நெடுஞ்சாலை மட்டுமே இருந்தது. இப்போது நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 13,000 கி.மீ தேசிய நெஞ்சாலைகள் இங்கு உள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தில் அமெரிக்காவைப் போன்று சாலை கட்டமைப்பு வசதிகள் இருக்கும். மாநிலம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த புதிய சாலைகள் வளர்ச்சியை அதிகரிக்கும்.

விவசாயிகள்

விவசாயிகள்

மாநிலத்தில் கிராம மக்களும் ஏழைகளும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருப்பார்கள்.. விவசாயிகள் உணவுகளை வழங்குவது மட்டுமின்றி, ஆற்றல் உற்பத்தியாளராகவும் மாற வேண்டும்.. எரிசக்தி உற்பத்தியில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.. பல்லியா இணைப்பு விரைவுச்சாலை அமைப்பதன் மூலம் லக்னோவிலிருந்து பூர்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நான்கரை மணி நேரத்தில் பாட்னாவை அடைய முடியும்.

எளிதாக சந்தைக்கு எடுத்து செல்லலாம்

எளிதாக சந்தைக்கு எடுத்து செல்லலாம்

பல்லியா முதல் பக்ஸர்வுக்கு அரை மணி நேரத்திலும், பல்லியாவிலிருந்து சாப்ராவுக்கு ஒரு மணி நேரத்திலும் அடையலாம். கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை அமைப்பதன் மூலம், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் நகரங்கள் பீகாரில் உள்ள சாப்ரா, பாட்னா மற்றும் பக்சர் ஆகியவற்றுடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்லியா விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகளை லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னாவில் இருக்கும் சந்தைகளுக்கு எளிதாக எடுத்துச் செல்லலாம்.

புதிய திட்டங்கள்

புதிய திட்டங்கள்

130 கோடி செலவில் சந்தௌலியில் இருந்து மொஹானியா வரை அமைக்கப்படும் புதிய சாலை, டெல்லி- கொல்கத்தா ஜிடி சாலை வழியாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள சண்டௌலி மற்றும் பீகாரில் உள்ள கைமூர் மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது. சைத்பூர் முதல் மர்தாக் சாலை அமைப்பதன் மூலம், மௌவிலிருந்து வாரணாசிக்கு சைத்பூர் வழியாக நேரடியாகச் செல்ல முடியும். இதுபோன்ற சிறந்த சாலை வசதிகள் மூலம் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக நிலை மேம்படும். பின்தங்கிய மாவட்டங்களுக்கும் நல்ல சாலை வசதி கிடைக்கும்" என்றார்.

யோகி ஆதித்யநாத் நன்றி

யோகி ஆதித்யநாத் நன்றி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்படும் இந்த புதிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் மற்றும் உங்கள் (கட்கரி) ஒத்துழைப்பால், உத்தரப் பிரதேசம் உலகத் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகள் கிடைக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி வேகமடைகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+