ஹிஜாப்புக்கு பதில்.. வேறு எங்காவது நிதிஷ் குமார் தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? உத்தர பிரதேச அமைச்சர் சர்ச்சை
லக்னோ: ‛‛பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் மனிதர் தானே. இந்த விஷயத்திற்காக அவரை இப்படியெல்லால் துரத்தக்கூடாது. 'ஹிஜாப்'பை தொட்டதற்கே இவ்வளவு பெரிய அமளி ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர் வேறு எதையாவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?'' என்று உத்தர பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிசாத் கூறியிருப்பது அடுத்த சர்ச்சையாக மாறி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த அரசு விழாவில் இஸ்லாமிய பெண் டாக்டர் ஹிஜாப் அணிந்து வந்தார்.

அப்போது நிதிஷ் குமார் அவரது ஹிஜாப்பை கீழே இழுத்து முகத்தை பார்த்தது சர்ச்சையைானது. காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் நிதிஷ் குமாரை கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண்ணை மானப்பங்கம் செய்துள்ளதாக கர்நாடகா உள்பட பல இடங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கேள்விக்கு தற்போது பாஜக அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த அமைச்சரின் பெயர் சஞ்சய் நிசாத். இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
இவர் நிசாத் எனும் கட்சியை தொடங்கி உள்ளார். நிசாத் என்பது ஜாதியின் பெயராகும். ஜாதி கட்சியை வைத்துள்ள சஞ்சய் நிசாத் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் உத்தர பிரதேச மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக (எம்எல்சி) உள்ளதோடு, கேபினட் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஹிஜாப் சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சஞ்சய் நிசாத், ‛‛அவரும் (நிதிஷ் குமார்) மனிதர் தானே. இந்த விஷயத்திற்காக அவரை இப்படியெல்லால் துரத்தக்கூடாது. 'ஹிஜாப்'பை தொட்டதற்கே இவ்வளவு பெரிய அமளி ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர் வேறு எதையாவது தொட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?" என்று கூறி சிரித்தார்.
சஞ்சய் நிசாத்தின் கருத்து இப்போது சர்ச்சையாகி உள்ளது. எரியுற எண்ணெயில் எண்ணெய் ஊற்றுவது போல் அவரது கருத்து உள்ளதாக கூறி எதிர்க்கட்சியினர் அவரது கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அஸ்லம் செய்க் கூறுகையில், ‛‛சஞ்சய் நிசாத்தின் கருத்து மிகவும் இழிவானது. பெண் மீதான வெறுப்பு நிறைந்த கருத்தாக உள்ளது. ஹிஜாப் முஸ்லிம் பெண்களுக்கு புனிதமான ஒன்றாகும். அதை மீறுவது என்பது அத்தகைய புனிதத்தின் மீதான தாக்குதலாகும்.
அதனை கிண்டல் செய்வது அருவருப்பானது. இத்தகைய மனநிலை தான் பாஜகவின் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பாக கருதாதற்கு முக்கிய காரணமாகும். பெண் குழந்தைகளை காப்போம்.. பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பது பாஜகவின் வெற்று கோஷமாக தான் உள்ளது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதையடுத்து சஞ்சய் நிசாத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியயின் சுமையா ராணா போலீசில் புகார் செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications