Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொய்டா பெண் செய்த அந்த தவறு.. மொத்தமும் போச்சு.. 27 லட்சம் ரூபாய் அபேஸ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பை எடுத்துப் பேசியதால் பெண் ஒருவர் ரூ. 27 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிள் திருட்டு, கோழி திருட்டு, ஆடு திருட்டு என பலவகை திருட்டுகளைப் பார்த்திருப்போம். டிஜிட்டல் யுகம் வந்த பிறகு ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டு என பல ரூட்டுகளைப் போட்டு ஆட்டைய போடும் கும்பல் அதிகரித்துவிட்டன. தினமும் புதிய புதிய மோசடி சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பீடி தொழில், ஊறுகாய் தொழில் போன்ற குடிசைத் தொழில்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வடநாடுகளில் சைபர் கிரைம் தொழிலை குடிசைத் தொழிலாகவே பல கும்பல்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

noida crime money

செல்போனுக்கு தேவையில்லாத அழைப்புகள் வந்தால் பேச வேண்டாம், ஒன் டைம் பாஸ்வேர்டுகளை சொல்லக் கூடாது, ஏடிஎம், ஆதார், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை கூறக் கூடாது, அடையாளம் தெரியாத செயலிகளில் கடன் வாங்கக் கூடாது என காவல் துறையினரால் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், படித்தவர்கள் கூட இதுபோன்ற சைபர் குற்றங்களில் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்யும் அளவுக்குச் சென்று விடும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் செய்த ஒரு தவறால் தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் மற்றும் கடன் வாங்கியதாக 27 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் 44 வயது பெண். இவரது செல்போனின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, அப்பெண்ணும் பேசியுள்ளார். அப்போது, கஸ்டமர் கேரில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளனர். பின்னர், இ-சிம் எனும் புதிய வசதி வந்துள்ளது. இந்த வசதியை ஆக்டிவேட் செய்தால், உங்களுடைய செல்போன் தொலைந்துவிட்டால் கூட நீங்கள் எளிதாக சிம் கார்டை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய செல்போன் எண்ணை இழக்காமல் தடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட பெண், உண்மையாகவே கஸ்டமர் கேரில் இருந்து அழைத்து சொல்கின்றனர் என நினைத்து கஸ்டமர் கேர் பெண் சொல்வதை எல்லாம் படிப்படியாகச் செய்திருக்கிறார். பின்னர், இப்போது உங்களுடைய எண்ணுக்கு ஒரு கோடு வரும், அதனைப் பதிவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து, அவரும் பதிவிட்ட நிலையில் அடுத்த சில நொடிகளில் அவரது செல்போன் செயலிழந்துள்ளது.

இதில் ஹைலைட் என்னவென்றால் செல்போன் செயலிழந்த நிலையில் அதுகுறித்து பதட்டம் அடையாமல், அப்பெண் செப்டம்பர் 1 ஆம் தேதி புது சிம் வந்துவிடும் என்று நினைத்து காத்திருந்துள்ளார். இதையடுத்து, செப்டம்பர் 1 ஆம் தேதி புதிய சிம் கார்டு வராததால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்து பேசியிருக்கிறார். அவர்களுக்கு இவரது பிரச்னை என்னவென்று தெரியாததால், அதே எண்ணில் புதிய சிம் கார்டுக்கு அப்ளை செய்தால் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, அப்பெண்ணும் புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பித்துப் பெற்றுள்ளார்.

இதையடுத்து, செல்போனில் சிம்மை பொருத்திய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. செல்போனை ஆன் செய்ததும் அவருக்கு மளமளவென குறுந்தகவல்கள் வந்துள்ளன. அந்த குறுந்தகவல்களில் அவரது வைப்புத் தொகைகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும், இரண்டு வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் குறுந்தகவல்கள் வந்துள்ளன. அதைவிடக் கொடுமையாக அப்பெண்ணின் பெயரில் செயலிகள் மூலமாக ரூ. 7.40 லட்சம் தொகை கடனாக பெறப்பட்டுள்ளதாகவும் குறுந்தகவல் வந்துள்ளது.

அப்பெண்ணின் செல்போன் மூலமாக அவரது மெயிலைப் பயன்படுத்தி அப்பெண்ணிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். செல்போன் தொலைந்தாலும் அதே நம்பர் கிடைக்கும் என நம்பி 27 லட்சம் ரூபாய் பெண் இழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+