உ.பி. செவிலியர்.. பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை.. உத்தரகாண்டில் வெடித்தது போராட்டம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூத்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும் என்று எஸ்பி சிட்டி மனோஜ் கத்யாலி கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துப்பட்டாவால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர், தனது 11 வயது மகளுடன் உத்தரப்பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் தங்கி இருந்துள்ளார். அவர் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு தினமும் வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். ஆனால், ஜூலை 30 ஆம் தேதி மருத்துவமனையில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய செவிலியர் வீட்டுக்குத் திரும்ப வரவில்லை.
இதையடுத்து, செவிலியரைக் காணவில்லை என அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பெண் காணாமல்போன 8 நாட்களுக்குப் பிறகு அவரது வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அப்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
இந்நிலையில், செவிலியரின் மொபைல் போன் சிக்னலின் அடிப்படையில் 28 வயதான தர்மேந்திரா என்பவரை போலீஸார் கைது செய்தனர். கூலி தொழிலாளியான தர்மேந்திரா குடிபோதையில் செவிலியரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் வீட்டுக்குள் நுழையும்போது வாயைப் பொத்தி புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மேலும், அவரிடம் இருந்த மொபைல் போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், எனது சகோதரி ஏற்கனவே விவாகரத்து பெற்று 11 வயது மகளை வளர்க்கப் போராடி வந்தாள். தாய் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் அவரது மகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்கப்படும் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் மீனா சர்மா கூறுகையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும். நாகரீகமான சமுதாயத்தில் காட்டுமிராண்டித்தனமான நபர்களுக்கு இடமில்லை. என்றார். எஸ்.பி. சிட்டி மனோஜ் கத்யாலி கூறுகையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை முழுமையாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications