லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரும் வன்முறையாக வெடித்த லக்னோ போராட்டம்- ஒருவர் பலி- போலீஸ் விசாரணை

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவா... வேணாம்! எச்சரிக்கும் நாடுகள்

    லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ வன்முறை தொடர்பாக உத்தரப்பிரதேச டிஜிபி ஓபி சிங் கூறியதாவது:

    குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.

    One dead in Lucknow CAA Protest

    அப்படியான நிலையில் இந்த உயிரிழப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

    லக்னோ வன்முறைகள் தொடர்பாக 55 பேரை கைது செய்துள்ளோம். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். இதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    லக்னோவில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். மீடியாக்களின் ஓபி வேன்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    மங்களூருவில் போலீசார் துப்பாக்கிச் சூடு- 6 பேர் படுகாயம்; 3 பேர் கவலைக்கிடம்!மங்களூருவில் போலீசார் துப்பாக்கிச் சூடு- 6 பேர் படுகாயம்; 3 பேர் கவலைக்கிடம்!

    அதனால் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை வீசினோம். நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இவ்வாறு ஓபி சிங் கூறினார்.

    English summary
    At least one person died in Lucknow during violent protests against the Citizenship Act.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X