லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்னிக்கு அவ்வளவு பேசினாரே யோகி.. "ஆக்சிஜனே இல்லை".. ஓபன் லெட்டர் எழுதிய பாஜக எம்பி..!

உபியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது

Google Oneindia Tamil News

லக்னோ: தன்மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடே இல்லை என்று அடித்து கூறிய உபி முதல்வர் யோகிக்கு, பாஜக எம்பி ஒரு லெட்டர் எழு உள்ளார்.. தங்கள் தொகுதியில் ஆக்ஸிஜனே இல்லை என்று பகிரங்கமாகவே குற்றச்சாட்டி எழுதிய அந்த ஓபன் லெட்டர்தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் அதிக அளவு தொற்று பாதித்த மாநிலங்களில் ஒன்று உத்தரபிரதேசம்.. நாளுக்கு நாள் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பெருகி வருவதால் திணறி கொண்டிருக்கிறார் அந்த மாநில முதல்வர் யோகி.

முதியோருக்கு கொரோனா தடுப்பூசி... முதலிடத்தில் சென்னை... மற்ற மாவட்டங்களின் நிலை என்ன..? முதியோருக்கு கொரோனா தடுப்பூசி... முதலிடத்தில் சென்னை... மற்ற மாவட்டங்களின் நிலை என்ன..?

கடந்த சில தினங்களுக்கு முன்பு, உபியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும், அதனால்தான் நிறைய பேர் இறந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதும் யோகி கொந்தளித்து விட்டார்.. யார் சொன்னது எங்க மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று? அப்படி எதுவுமே எங்குமே நடக்கவில்லை.. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளதாக வதந்தி பரப்பினால், அந்த ஆஸ்பத்திரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வார்ன் செய்திருந்தார்.. யோகியின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

 சித்தார்த்

சித்தார்த்

"யாராவது பொய் சொன்னால் கன்னத்தில் அறை விழும்" என்று நடிகர் சித்தார்த், யோகியின் இந்த மிரட்டல் பேச்சுக்குதான் எதிர்வினையாற்றியிருந்தார் என்பது வேறு விஷயம். ஆனால், நிஜமாகவே உபியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இப்போது இருக்கிறதாம்.. அதை மத்திய அமைச்சர் ஒருவரே ஓபனாக சொல்லி இருக்கிறார்.

கள்ளச்சந்தை

கள்ளச்சந்தை

அம்மாநில பரேலி தொகுதி பாஜக எம்பியும், மத்திய அமைச்சருமான சந்தோஷ் கங்வார், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு லெட்டர் எழுதியுள்ளார். அதில், "என்னுடைய தொகுதியில் கடுமையான ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது... வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன..

சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

மாநில சுகாதார துறையை மக்கள் தொடர்பு கொண்டால் அவர்கள் போனையே எடுக்கிறது இல்லை.. நேரில் சென்று ஆக்சிஜன் கேட்பவர்களையும் தேவையில்லாமல் அலைய விடுகிறார்கள்.. இதனால் நோயாளிகள் கடுமையான கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.. அதனால், பரேலி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடிதம்

கடிதம்

இதை பற்றி மத்திய அமைச்சர் கங்வார் சொல்லும்போது, "என்னுடைய தொகுதி மக்கள் என்னிடம் முறையிட்டனர்... அதனால்தான் லெட்டர் எழுதிமுறைப்படி தெரிவித்துள்ளேன்" என்று கூறி உள்ளார்.இந்த லெட்டர் மூலம் உபியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.. அத்துடன் யோகிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது..!

English summary
Oxygen: Union Minister writes to CM Yogi to seeks supply of medical oxygen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X