அப்பா தான் அம்மாவை கொன்றார்.. ஓவியம் வரைந்து தந்தையை சிக்க வைத்த குழந்தை.. கலங்க வைக்கும் சம்பவம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தனது தாயை கொன்று நாடகமாடிய தந்தையை 4 வயது நிரம்பிய மகள் ஓவியம் வரைந்து போலீசில் சிக்க வைத்துள்ளார். விசாரணையின்போதும் தாயை இழந்த அந்த குழந்தை தனது தந்தை பற்றி கூறிய தகவல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி அருகே உள்ள சிவ் பரிவார் காலனியை சேர்ந்தவர் சந்தீப் புதோலியா. இவருக்கு கடந்த 2019ம் ஆண்டில் திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சோனாலி. இந்த தம்பதியின் திருமண வாழ்க்கை தொடக்கத்தில் இனிமையாக சென்று கொண்டிருந்தது.

அதன்பிறகு சில மாதங்களில் கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சோனாலியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டுள்ளனர். கார், பணம் வாங்கி வரும்படி சோனாலியை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதுபற்றி சோனாலி தனது தந்தை சஞ்சீவ் திரிபாதியிடம் புகாரளித்தார். சஞ்சீவ் திரிபாதி தனது மருமகன் சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேசி பார்த்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரித்தனர். அப்போது கூடுதல் வரதட்ணை வேண்டாம் என்று கூறி சந்தீப் தரப்பு கூறியது. இதனால் பிரச்சனை சமாதானம் செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டது.
இதையடுத்து சந்தீப் உடன் மீண்டும் சோனாலி வாழ தொடங்கினார். சோனாலியும் கர்ப்பமானார். மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த சமயத்தில் சோனாலியிடம் கணவர் சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் சண்டைக்கு சென்றனர். ஆண் குழந்தை பெற்று கொடுக்கவில்லை என்று சோனாலியை திட்டி தீர்த்தனர். அதுமட்டுமின்றி மருத்துவமனையில் சோனாலியை தனியாக விட்டு விட்டு சென்றனர். இதையடுத்து மருத்துவமனை கட்டணத்தை தந்தை சஞ்சீவ் திரிபாதி செலுத்தி மகள் சோனாலியை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அதன்பிறகு பெரியவர்களை வைத்து தந்தை சஞ்சீவ் திரிபாதி தனது மகள் சோனாலியை மீண்டும் சந்தீப்புடன் சேர்த்து வைத்தார். சோனாலி - சந்தீப் தம்பதியின் மகளுக்கு இப்போது 4 வயது ஆகிறது. இருப்பினும் அடிக்கடி சோனாலியை அவரது கணவர் சந்தீப் மற்றும் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். தனது மகளின் எதிர்காலம் கருதி சோனாலி அந்த கொடுமைகளை தாங்கியபடி வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் தான் சோனாலி நேற்று தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடல் தூக்கில் இருந்தது. இதையடுத்து சந்தீப்பின் குடும்பத்தினர் சோனாலியின் குடும்பத்துக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். சோனாலி தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தனர். அதை கேட்டு கதறிய சோனாலியின் குடும்பத்தினர் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தனர். மகள் சோனாலியின் உடலை பார்த்து தந்தை சஞ்சீவ் திரிபாதி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோனாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் சோனாலியின் கணவர் சந்தீப் தரப்பினர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தனர். அதேவேளையில் சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறினார். தனது மகள் சோனாலியை மருமகன் சந்தீப் மற்றும் அவரது தாய் ஆகியோர் கொலை செய்து இருக்கலாம் என்று கூறினார்.
இதுதொடர்பாக அவர் போலீசில் பரபரப்பான புகார் ஒன்றையும் அளித்தார். அதில், ‛‛திருமணத்தின்போது மகள் சோனாலிக்கு ரூ.20 லட்சம் ரொக்கப்பணம், பிற பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு கார் கேட்டும், பணம் கேட்டும் என் மகளை சந்தீப் மற்றும் அவரது தாய் துன்புறுத்தினர். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. சமாதானத்தை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகு பெண் குழந்தை பிறந்ததால் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனையை விட்டு சென்றனர். இப்போது என் மகளை இருவரும் கொன்றுவிட்டனர்'' என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை சந்தீப் மற்றும் அவரது தரப்பு மறுத்தது. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த வேளையில் தான் சோனாலி - சந்தீப்பின் 4 வயது மகள் முக்கிய தகவலை போலீசாரிடம் கூறினார். தனது தாயை தந்தை தான் அடித்து கொன்றார் என்று கூறிய சிறுமி, சம்பவம் எப்படி நடந்தது? என்பதை போலீசாரிடம் படம் வரைந்து காட்டி கண்கலங்க வைத்தார். இதுபற்றி அந்த 4 வயது குழந்தை போலீசாரிடம் கூறுகையில், ‛‛எனது அம்மாவை, அப்பா தான் அடித்தார். எனது அம்மாவின் தலையில் கல்லை வைத்து தாக்கினார். கீழே விழுந்தபோது எனது பாட்டி அவரை தரதரவென இழுத்து சென்றார். அதன்பிறகு அப்பா தான் அம்மாவை தூக்கில் தொங்கவிட்டார்'' என்று மழலை மொழியில் கூறி கலங்க வைத்தார். அதுமட்டுமின்றி வீட்டில் நடந்த சம்பவத்தை ஓவியமாகவும் வரைந்து காட்டினார்.
இதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதோடு மனைவி சோனாலியை கொன்றுவிட்டு நாடகமாடி எஸ்கேப்பாக முயன்ற சந்தீப்பை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications