காப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாயமான பெண்.. சிக்கலில் பாஜக தலை
பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு எதிராக புகார் கொடுத்த பெண் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
லக்னோ: பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு எதிராக புகார் கொடுத்த பெண் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்தே அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகம் ஆகி வருகிறது. அதேபோல் போலீஸ் என்கவுண்டரும் சாதாரண நிகழ்வாக மாறி உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது அங்கு பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் பாஜக முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்த சில மணி நேரத்தில் அந்த பெண் காணாமல் போய் உள்ளார்.

யார் கல்லூரி
லக்னோவில் இருந்து 200 கிமீ தூரத்தில் இருக்கிறது சுவாமி சுக்தேவானந்தா கல்லூரி. இது பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவிற்கு சொந்தமான கல்லூரி ஆகும் இது. இந்த கல்லூரியில் படிக்கும் பெண் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.

என்ன நாசம்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சனந்த் சமாஜ் அமைப்பை சேர்ந்த பெரிய தலைவர் ஒருவர் பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். அவர் தற்போது என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். யோகி ஜி, மோடி ஜி பிளீஸ் உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள். நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று தெரியும்.

ஆனால் என்ன
ஆனால் நான் இனியும் உயிரோடு இருப்பேனா என்று தெரியாது. அந்த சந்நியாசியிடம் போலீசும், நீதிபதிகளும் கட்டுப்பட்டு இருப்பதாக கூறுகிறார். அவரின் பாக்கெட்டில் எல்லோரும் இருப்பதாக சந்நியாசி என்னிடம் கூறுகிறார். ஆனால் அவருக்கு எதிராக எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது, என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

வைரல்
ஆனால் அந்த வீடியோவில் சின்மயானந்தா பெயரை அந்த பெண் நேரடியாக சொல்லவில்லை. இந்த நிலையில் அந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில் அவர் காணாமல் போய் உள்ளார். நான்கு நாட்கள் ஆகியும் அந்த பெண் எங்கே போனார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசில் அந்த பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

உதவி
பாஜக முன்னாள் எம்பி மற்றும் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாதான் தன்னுடைய மகளை கடத்தி உள்ளார். அவர் என்னுடைய மகளை கொலை செய்திருக்க கூட வாய்ப்புள்ளது. போலீசார் இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் புகாரில் கூறியுள்ளார்.

போலீசார் வழக்கு
ஆனால் போலீசார் இதை கடத்தல் வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதேபோல் இதில் சின்மயானந்தா மீதான பாலியல் புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை. கடத்தல் மற்றும் குற்றச்செயல் பிரிவின் கீழ் மட்டும் வழக்கு பதிந்துள்ளனர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications