வீட்டிற்கு வெளியே வர பயந்த பெண்கள், பாஜக ஆட்சியில் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள்: பிரதமர் பேச்சு
லக்னோ: உத்திரபிரதேசத்தில் கடந்த காலங்களில் சூரியன் மறைந்த பிறகு வீட்டை விட்டு வெளியே வர பயந்த பெண்கள் , தற்போதைய பாஜக ஆட்சியில் நாட்டிற்கே பெருமை சேர்க்கிறார்கள் என மீரட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவி ஏற்று ஆட்சி நிறைவடையும் தருவாயில் மக்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே உத்திரப்பிரதேசத்தில் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பாஜக போலவே காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரக் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு சமமாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோரும் களத்தில் முன்னணியில் இருக்கின்றனர்.

அடிக்கல் நாட்டிய பிரதமர்
இந்த நிலையில் புத்தாண்டில் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, மீரட்டில் நவீன மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பல்கலைக்கழகம் இரண்டரை வருடங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும், 700 கோடி மதிப்பீட்டில்விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் , உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பைபுடன் அமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.

விளையாட்டு முக்கியம்
தொடந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வசதி படைத்தவர்கள் மட்டுமே விளையாட்டு பயிற்சி பெற முடியும் என்ற நிலையை மாற்றி தற்போதைய பாஜக அரசில் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது எனவும், புதிய தேசிய கல்விக் கொள்கையில் அறிவியல் வணிகம் பிற படிப்புகளை போலவே விளையாட்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் முன்பு விளையாட்டு என்பது கூடுதல் செயலாக கருதப்பட்ட நிலையில் விளையாட்டு அர்ப்பணிப்பு பாடமாக பாஜக ஆட்சியில் இருக்கும் என கூறினார்.

இளைஞர்கள் பின்னால் இந்தியா
மற்ற தொழில்களைப் போலவே நமது இளைஞர்கள் விளையாட்டை பார்க்க வேண்டும் என தான் விரும்புவதாகவும், நம் நாட்டில் இளைஞர்களின் விளையாட்டுக்கு நம்பிக்கை வைப்பது அவசியம் என்றும், விளையாட்டை தொழிலாக மாற்றுவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறிய பிரதமர், இளைஞர்களே புதிய இந்தியாவின் அச்சாணி, இளைஞர்களும் புதிய இந்தியாவின் தலைவர், இளைஞர்கள் எங்கே ஓடுவார்கலோ, அங்கே இந்தியா ஓடும் எனவும் இனி இந்தியா எங்கே ஓடப் போகிறதோ உலகமே அங்கு ஓடப் போகிறது எனப் பேசினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு
முன்னதாக உத்திரபிரதேசத்தில் குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் மட்டுமே விளையாடினர் எனவும், சட்டவிரோத நில அபகரிப்பு போட்டிகள் நடந்த நிலையில் யோகி ஆதித்யநாத் அரசு இப்போது குற்றவாளிகளுடன் 'ஜெயில்-ஜெயில்' விளையாட்டை விளையாடுகிறது என கூறிய பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் அரசு குற்றவாளிகளை சிறையில் அடைத்ததால் தான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறது எனவும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேற பயந்த பெண்கள் இன்ரு நாடு முழுவதும் பெருமை சேர்க்கிறார்கள் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications