ஓடும் காரில் கதறிய இளம்பெண்.. நண்பனாக பழகி ஜூனியர் மாணவியை சீரழித்த சீனியர்.. பேரதிர்ச்சி
லக்னோ: கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவியிடம் நட்பாக பழகி அவரை தனியாக சந்திக்க அழைத்து காரில் கூட்டி சென்று கைகளை கட்டிவைத்து கொலை மிரட்டல் விடுத்து ஓடும் காரில் சீனியர் மாணவர் பலாத்காரம் செய்துள்ளார். ஆக்ராவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சீனியர் மாணவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனியாருக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் காசிப்பூரை சேர்ந்த சிவாங்க் சிங் என்பவர் படித்து வருகிறார். இவருக்கும் அந்த கல்லூரியில் படித்து வரும் ஜூனியர் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நட்பாக மாறியது. இதையடுத்து அவர்கள் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அவ்வப்போது பேசி வந்தனர். இதற்கிடையே தான் ஜூனியர் மாணவி உடனான நட்பு என்பது மாணவர் சவாங்க் சிங்கிற்கு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
ஆனால் சிவாங்க் சிங் அந்த காதலை ஜூனியர் மாணவியிடம் தெரிவிக்கவில்லை. காதலை தெரிவித்தால் நட்பை கைவிட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் சிவாங்க் சிங் காதலை அவரிடம் கூறாமல் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த 10ம் தேதி மாலையில் சிவாங்க் சிங், ஜூனியர் மாணவிக்கு போன் செய்து ‛‛உன்னை சந்திக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இயக்குநர் சேரன் திடீர் டென்ஷன்! தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவருடன் வாக்குவாதம்! அதிர்ந்த கடலூர்
இதையடுத்து நண்பர் தானே என்ற அடிப்படையில் ஜூனியர் மாணவி, சிவாங்க் சிங்கை சந்திக்க சென்றார். சிக்கந்திரா பகுதியில் நடந்த சந்திப்பின்போது ஜூனியர் மாணவியை சிவாங்க் சிங் கட்டாயப்படுத்தி தனது காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளார். காரை இன்னொருவர் ஓட்டிச் செல்ல சிவாங்க் சிங் மாணவியுடன் பின்இருக்கையில் அமர்ந்துள்ளார். இந்த வேளையில் எங்கு செல்கிறோம்? என்று மாணவி கேட்டபோது சிவாங்க் சிங் எந்த பதிலும் கூறவில்லை.
இதனால் மாணவிக்கு பயம் வந்துள்ளது. இதையடுத்து தன்னை காரில் இருந்து இறக்கிவிடும்படி அவர் சிவாங்க் சிங்கிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் மாணவி கோபமடைந்தார். இந்த வேளையில் ஆத்திரமடைந்த சிவாங்க் சிங் மாணவியின் கையை காரின் இருக்கையுடன் சேர்த்து கட்டியுள்ளார். மேலும் காரில் இருந்த திரையை எடுத்து காரின் உட்புறத்தில் உள்ள பின்இருக்கையை சுற்றி கட்டினார்.
கார் ஓட்டுபவர் மற்றும் வெளியே இருந்து பார்ப்போருக்கு காரின் பின்இருக்கையில் என்ன நடக்கிறது? என்பது தெரியாத வகையில் திரையை கட்டினார். இதனால் ஏதோ தவறு நடக்க போவதை அறிந்த ஜூனியர் மாணவி அலறியுள்ளார். ஆனால் அவரது வாயை பொத்திய சிவாங்க் சிங் சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளதோடு, ஓடும் காரிலேயே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு மாணவியை சாலையேராம் தள்ளிவிட்டுவிட்டு சிவாங்க் சிங் அதே காரில் சென்றார். பாதிக்கப்பட்ட மாணவி தனது அறைக்கு வந்தார். அதன்பிறகு அவர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிவாங்க் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதை அறிந்த சிவாங்க் சிங் தலைமைறவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆக்ராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜூனியர் மாணவியை பலாத்காரம் செய்த சிவாங்க் சிங்கை உடனடியாக போலீசார் கைது செய்து விரைந்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போலீசாரை வலியுறுத்தி உள்ளனர்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications