பிரியங்கா காந்தி ஒரு அரக்கி... பாஜக ஒட்டிய போஸ்டர்.. பரபரப்பில் உ.பி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை அரக்கி போல் சித்தரித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி சமீபத்தில் பதவியேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் கடுமையான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

அதன் உச்சகட்டமாக, தற்போது பாஜக சார்பில் பாரபங்கி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் பிரியங்கா காந்தி அரக்கி போன்றும், பாஜக கட்சியை சேர்ந்த பிரியங்கா ராவத் துர்க்கை அம்மன் போல் காட்சியளிப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பாரபங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போஸ்டர் குறித்து பிரியங்கா ராவத் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. இப்போது தான் தெரியும். இது குறித்து நான் விழிப்புணர்வில்லாமல் இருந்து விட்டேன். அதை செய்தவர்கள் யார் என்று விரைவில் கண்டு பிடிப்பேன் என்றார்.
முன்னதாக பீகாரில் காங்கிரஸ் கட்சியினர் மோடியை அரக்கன் போலவும், பிரியங்கா காந்தியை துர்க்கை அம்மனை போலவும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். எனவே, அதற்கு பதிலடியாக இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, போஸ்டர் விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படும் என்று உ.பி. மாநில மகளிர் காங்கிரஸ் கூறியுள்ளது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications