இது சுதந்திர நாடா? உ.பி போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா.. சரமாரி கேள்வி.. வைரல் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் கஸ்டடியில் பலியானவரின் குடும்பத்தை பார்க்க சென்ற காங்கிரஸ் உ.பி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இவர் தற்போது ஆக்ரா அருகே போலீஸ் காவலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
Recommended Video
உத்தர பிரதேசத்தை சேர்ந்த அருண் வால்மிகி என்ற இளைஞர் அங்கு உள்ள ஜகதீஸ்புரா காவல்நிலையத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக நேற்று காலை புகார் வைக்கப்பட்டது. தூய்மை பணியாளரான இவர் கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு சொந்தமான பாதுகாப்பு அறையை சுத்தம் செய்யும் போது அங்கு இருந்து பணத்தை திருடியதாக புகார் வைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட அருண் வால்மிகி இன்று அதிகாலை உடல்நிலை மோசமான காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு.

காயம்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் வால்மிகி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரின் உடலில் மோசமான காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் இவரை தாக்கியதில் பலியாகி இருக்கலாம், இது கஸ்டடி மரணம் என்று போலீசார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அருண் வால்மிகியிடம் இருந்து சில ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ்
போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த அருண் வால்மிகிக்கு நீதி வேண்டி அவரின் உறவினர்கள் ஆக்ரா அருகே ஜகதீஸ்புரா பகுதியில் போராடி வருகிறார்கள். அங்கு இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் ஆக்ராவில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பித்து மேஜிஸ்டிரேட் உத்தரவிட்டுள்ளார். இங்கு கூட்டம் கூட கூடாது, அரசியல்வாதிகள் வர கூடாது, மக்கள் போராட்டம் நடத்த கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அருண் வால்மிகியின் குடும்பத்தை பார்க்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கைது
இவர் தற்போது ஆக்ரா அருகே போலீஸ் காவலில் உள்ளார். ஆக்ராவிற்கு காரில் சென்ற போது லக்னோ போலீசார் மூலம் இவர் கைது செய்யப்பட்டார். இவரின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், உங்களுக்கு ஆக்ரா செல்ல அனுமதி இல்லை. 144 இருப்பதால் உங்களை தடுத்து நிறுத்துகிறோம் என்று பிரியங்கா காந்தியை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். போலீசாரிடம் பிரியங்கா காந்தி வாக்கு வாதம் செய்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

விமர்சனம்
தான் அப்புறப்படுத்தப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, எந்த அடிப்படையில் என்னை அப்புறப்படுத்தினார்கள். நான் வீட்டில் இருந்தேன். வீட்டை விட்டு வெளியே வந்தாலே போலீஸ் அப்புறப்படுத்துகிறது. அந்த அளவிற்கு பயமா? நான் அருண் வால்மிகியின் குடும்பத்தினரைத்தான் பார்க்கக் செல்கிறேன். எனக்கு அவர்களை பார்க்க முழு உரிமை இருக்கிறது. இது சுதந்திர நாடு. யாரும் எங்கும் செல்ல முடியும்.
|
சுதந்திர நாடு
உத்தர பிரதேசத்திற்கு மட்டும் தனி சட்டம் இருக்கிறதா என்ன? இங்கு நடப்பது மக்கள் ஆட்சி தானா? அருண் வால்மிகியின் மரணத்திற்கு அவரின் குடும்பத்தினர் நீதி கேட்டுள்ளனர். அவர்களுக்கு உங்கள் பதில் என்ன என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். முன்னதாக் லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்திக்க சென்ற போது இதேபோல் போலீசார் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு 38 மணி நேரம் அரசு விடுதியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications