இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சியின் போது 17 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த புகாரில் கிரிக்கெட் பயிற்சியாளர் உள்ளிட்ட கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் திரைப்பட இயக்குநர் சங்கரின் மருமகனும் சிக்கியுள்ளார்.
Recommended Video
புதுச்சேரி துத்தித்பட்டில் உள்ளது புதுச்சேரி கிரிக்கெட் கிளப். அரசு புறம்போக்கு நிலத்தையும், நீர் நிலைகள் ஆக்கிரமித்து மைதானம் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அப்போது கவர்னராக இருந்த கிரண்பேடி உத்தரவின் பேரில் மைதானம் மூடி சீல் வைக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டு பயிற்சிகள் நடந்து வருகிறது.

முத்திரைப்பாளையம்
மைதானம் மூடப்பட்டு இருந்தபோது முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் என்பவர் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அச்சிறுமி கிரிக்கெட் கிளப் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தார்.

கிரிக்கெட் கிளப்
கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் பயிற்சியாளரை அட்ஜஸ்ட் செய்து செல்லுமாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புகாரை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அச்சிறுமி குழந்தைகள் நல குழுவிடம் புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் பிரிவின் கீழும் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் கிளப் கேப்டன் தாமோதரன் மகனான ரோஹித் ஆகிய நான்கு பேர் மீது தவறுக்கு உடந்தையாக இருந்ததாக போக்சோ பிரிவின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர்.

திருமணம்
இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரனின் மகன் ரோஹித்திற்கு அண்மையில் திரைப்பட இயக்குனர் சங்கர் மகள் ஐஸ்வர்யாவுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஈசிஆர் சாலையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

புதுவை கிரிக்கெட் அணி
ரோஹித் மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஆவார். இவர் புதுவை கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் உள்ளார். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் 5 பேரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications