லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவில்களில் வழிபாடு.. கங்கை பயணம்.. பிரியங்காவின் அசால்ட் அரசியல்.. பாஜகவிற்கு அதிர்ச்சி!

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிதமான இந்துத்துவா அரசியலை கடைப்பிடித்து வருகிறார் என்றுதான் கூற வேண்டும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Priyanka Gandhi Ganga Yatra: 3 நாள் கங்கையில் பயணம்.. பின் வாரணாசியில் கூட்டம்- வீடியோ

    லக்னோ: காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிதமான இந்துத்துவா அரசியலை கடைப்பிடித்து வருகிறார் என்றுதான் கூற வேண்டும். அவரது பிரச்சார முறை அதைத்தான் உணர்த்துகிறது.

    பிரியங்கா காந்தி நேற்று முதல்நாள் இந்த உத்தர பிரதேச பிரச்சாரத்தை தொடங்கினார். மூன்று நாட்கள் கங்கை நதியில் சென்றபடி அவர் பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார். தற்போது அது முடிவிற்கு வந்துள்ளது.

    இன்று மாலை பிரியங்கா காந்தி வாரணாசியில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    3 நாள் கங்கை பயணம் முடிகிறது.. மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி.. வாரணாசியில் இன்று கூட்டம்! 3 நாள் கங்கை பயணம் முடிகிறது.. மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி.. வாரணாசியில் இன்று கூட்டம்!

    சூப்பர் மேடம்

    சூப்பர் மேடம்

    இவர் தனது பிரச்சாரத்தை தொடங்கியதே கங்கை நதியில் வழிபாடு நடத்திய பின்தான். கங்கையில் வழிபாடு நடத்தி, அதிலேயே சென்று பிரச்சாரம் செய்ய போகிறேன் என்று முடிவெடுத்து அதை முடித்தும் காட்டி இருக்கிறார். இந்துத்துவா தலைவர்கள், பாஜகவினர் கூட இப்படி கங்கையிலே சென்றபடி பிரச்சாரம் செய்தது கிடையாது.

    கோவில் வழிபாடு

    கோவில் வழிபாடு

    பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ததை விட அதிகமாக கோவில்களில்தான் வழிபாடு நடத்தினார். 10க்கும் அதிகமான கோவில்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வழிபாடு நடத்தி உள்ளார். இன்றும் மூன்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

    கங்கை நதி

    கங்கை நதி

    அதேபோல் கங்கை நதியில் இவர் வழிபாடு நடத்திய போது, அந்த தண்ணீரை அப்படியே குடித்தார். இதை பாஜக தலைவர்களே எதிர்பார்க்கவில்லை. பிரியங்கா காந்தி மிதமான இந்துத்துவா அரசியலை கடைபிடிக்கிறார் என்று பல அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரியங்கா காந்தியின் இந்த பிரச்சாரத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்து இருக்கிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாமும் பாஜக தலைவர்களுக்கு கூடும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடுகிறது. சமயங்களில் பாஜகவினருக்கு கூடும் கூட்டத்தை விட பெரிய கூட்டம் பிரியங்காவிற்கு கூடுகிறது.

    பெண்கள் கூட்டம்

    பெண்கள் கூட்டம்

    மிக முக்கியமாக பெண்கள் கூட்டம்தான் அதிகமாக பிரியங்காவிற்கு வருகிறது. பொதுவாக உத்தர பிரதேச அரசியலில் பெண்கள் எப்போதுமே அதிக அளவில் எந்த கட்சிக்கும் கூட மாட்டார்கள். ஆனால் முதல்முறையாக இந்திரா காந்திக்கு பிறகு பிரியங்கா காந்திக்கு அதிக அளவில் பெண்கள் கூடுகிறார்கள்.

    உடைக்கிறார்

    உடைக்கிறார்

    பாஜக தலைவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நம்பப்பட்டு வந்த இந்த கோவிலில் வழிபாடு செய்வது, கங்கை நதி வழிபாடு என அனைத்தையும் அப்படியே பிரியங்கா காந்தியும் செய்கிறார். இது உத்தர பிரதேச மக்களையும் கவர்ந்து இருக்கிறது. பாஜகவின் அரசியல் அடிமடியிலேயே பிரியங்கா இதன் மூலம் கை வைக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

    அதேபோல்

    அதேபோல்

    ஆனால் அதேசமயம் இன்னொரு பக்கம் மதசார்பற்ற நபர் போலவும் பிரியங்கா காட்டிக்கொள்கிறார். பெண்களிடம் அவர் தனியாக உரையாடும் போது நிறைய முற்போக்கு கருத்துக்களை பேசி வருகிறார். பாஜகவிடம் மிஸ்ஸாகும் இது போன்ற விஷயங்களையும் அவர் எளிதாக கடைபிடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Priyanka Gandhi's soft Hindutva politics may become a nightmare for BJP in the Future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X