மாபெரும் வரவேற்பு அளித்த மக்கள்.. முதல் பேரணியே அசத்தல்.. உ.பி களத்தில் பிரியங்கா காந்தி!
இன்று காலை டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் செல்லும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சிக்காக தனது அரசியல் பணிகளை தொடங்க இருக்கிறார்.
லக்னோ: காங்கிரஸ் கட்சியில் முழு நேர அரசியலில் களமிறங்கி இருக்கும் பிரியங்கா காந்தி சார்பாக இன்று உத்தர பிரதேசத்தில் பேரணி நடைபெற்றது. உத்தர பிரதேச காங்கிரஸ் பிரியங்காவை வரவேற்கும் விதமாக இந்த பேரணியை நடத்தியது.
நமஸ்தே.. நான்தான் பிரியங்கா காந்தி பேசுகிறேன்.. இந்த ஆடியோவை உத்தர பிரதேச மக்கள் கடந்த ஒரு வாரமாக கண்டிப்பாக வாட்ஸ் ஆப்பில் கேட்டு இருப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் சக்தி ஆப்பில் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்களுக்காக வெளியிட்ட ஆடியோதான் இது.
ஆம், இந்த ஆடியோவோடுதான் பிரியங்கா காந்தியின் அரசியல் பயணம் தொடங்கி உள்ளது. இன்று உத்தர பிரதேசம் சென்ற அவர் லக்னோவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார். மிக பிரமாண்டமாக அவரது அரசியல் பயணம் தொடங்கி உள்ளது.

என்ன பேசி இருக்கிறார்
நாளை நான் லக்னோ வருகிறேன். உங்களை சந்திப்பேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒன்றாக நாம் எல்லோரும் இணைந்து நல்ல அரசியல் ஒன்றை தொடங்க முடியும். என் நண்பர்களே, தங்கைகளே, வலிமையற்றவர்களே.. உங்களின் வாக்குகளுக்கு வலிமை இருக்கிறது, என்று அந்த ஆடியோவில் பிரியங்கா காந்தி பேசி இருக்கிறார்.

பெரிய பேரணி
இன்று காலை லக்னோ விமான நிலையம் வந்த பிரியங்காவிற்கு காங்கிரஸ் விமான நிலையத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் அலுவலகம் செல்லும் வழியில் பெரிய பேரணி போல நடத்தி அவரை காங்கிரஸ் கட்சி வரவேற்றது. அந்த வழியில் 28 இடங்களில் சிறிய சிறிய மேடைகள் அமைக்கப்பட்டு பிரியங்காவை பற்றி புகழ்ந்து கொண்டு இருந்தனர்.

மரியாதை செலுத்தினார்
பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியும், காங்கிரசின் இன்னொரு உத்தர பிரதேச மாநில பொறுப்பாளரான ஜோதிராதித்ய சிந்தியாவும் வந்தனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இன்று லக்னோவில் உள்ள லால்பாக் சந்திப்பில் மக்களை சந்தித்து பேச இருக்கிறார்கள். அதேபோல் அவர்கள் செய்தியாளர்களையும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. இதுதான் பிரியங்கா காந்தி காங்கிரசில் தீவிர அரசியலுக்கு வந்த பின் மக்களிடம் முதல்முறை பேசுவது ஆகும்.

பேச முடிவு
அதேபோல் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் வரிசையாக 12,13,14 ஆகிய நாட்களில் இவர்கள் உரையாற்ற போகிறார்கள். வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை நடக்கும் இந்த ஆலோசனையில், உத்தர பிரதேசத்தில் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்யலாம், பொதுக்கூட்டம் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!












Click it and Unblock the Notifications