இன்னும் 7 நாள் தான் Good Bye பாஜக..Good Bye மோடி! போலி பக்கிரி..உபியில் மோடிக்கு டாடா காட்டிய ராகுல்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரத்தில், பிஜேபியிடம் இருந்து நாடு விடுதலை பெறும், நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் வரப்போகிறது என பேசிய ராகுல்காந்தி, ஜூன் 4க்கு பிறகு குட் பை பிஜேபி, குட் பை நரேந்திர மோடி, டாடா! என கிண்டல் செய்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று இருக்கும் நிலையில் இன்னும் ஒரு கட்ட தேர்தல் அதாவது கடைசி கட்ட தேர்தல் மீதமுள்ளது

ஜூன் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்திய திருநாட்டை அடுத்து ஆளப்போகும் பிரதமர் யார் என்பதை அறிய அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
லோக் சபா தேர்தல்: பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார், 400 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்
வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் குறிப்பாக கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரமானது சூடு பிடித்திருக்கிறது. லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் அந்த வகையில் இறுதி கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ராகுல் காந்தி: நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையற்றினார். அப்போது கடும் வெப்ப அலை வீசியதால் அவர் குடிக்கும் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், ஜூன் 4க்கு பிறகு குட் பை பிஜேபி, குட் பை நரேந்திர மோடி, டாடா!.. பொதுமக்களை ஏமாற்றும் போலி பக்கிரிக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கிறது.
விடுதலை: இந்தியா கூட்டணி பொதுமக்களிடமிருந்து வாக்குகளை பெற்று வருகிறது. பிஜேபி இடம் இருந்து நாடு விடுதலை பெறும் நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் வரப்போகுது.. விரைவில் அதனை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.. மோடி சொன்னது போல் அவர் மற்றவர்களைப் போல பயாலஜிக்கலாக பிறந்த பிறப்பல்ல கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றால் அவரது உழைப்பு மக்களுக்கானதோ உழவர்களுக்கானதோ கிடையாது.
பரமாத்மா: அம்பானி அதானிக்காக மட்டுமே மோடியை கடவுள் அனுப்பியுள்ளார் என கூறுகிறாரா என தெரியவில்லை.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் அமலாக்கத்துறை விசாரித்தால் தனது செயல்களுக்கு பரமாத்மா தான் காரணம் எனக் கூறி அவர் தப்பித்து விடுவார்" என பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications