மண்டைக்கேறிய அரசு வேலை ஆசை.. பூஜையறையில் சுருண்ட கணவன்.. வாசலில் ஆண் நண்பர்.. ஆடிப்போன உத்தர பிரதேசம்
கான்பூர்: இந்தியாவில் கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன.. முறைதவறும் உறவுகளுக்காக, கட்டிய கணவன், பெற்ற குழந்தைகள், தாலி கட்டிய மனைவி என்ற பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? இது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளனர்,. அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
அரசு வேலைக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்த காதல் மனைவி, அவரின் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் குமார்.. இவர் ஷிவானி என்ற பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தார்.. ஷிவானியும் தீபக் குமாரை விரும்பினார்.. இதையடுத்து இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.. அதன்படி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிக்கு, 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
அரசு பணியில் தீபக்
ரயில்வே துறையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தவர் தீபக் . இப்போது 29 வயதாகிறது.. எனினும், சிஆர்பிஎஃப்-ல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.. இந்நிலையில், பூஜையறையில் பூஜை செய்துகொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக ஷிவானி உறவினர்களுக்கு போனில் தகவல் சொல்லி கதறி அழுதார்.. இதையடுத்து உறவினர்கள் பதறியடித்து கொண்டு ஓடிவந்தார்கள்..
ஆனால், தீபக்கின் சகோதரர் பியூஸ், தன்னுடைய அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்தார்.. எனவே, மருத்துவமனையில் தீபக்கின் உடலை, உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று பியூஸ் கோரிக்கை விடுத்தார்.. அப்போது திடீரென ஷிவானி, மருத்துவமனையில் எந்த டெஸ்ட்டும் தன்னுடைய கணவருக்கு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு காட்டினார்.
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
இதனால், பியூஸுக்கு சந்தேகம் வலுவானது. உடனே தீபக்கின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, போலீசில் புகார் தந்தார்.. அப்போதுதான் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டதில், தீபக்கின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக ரிப்போர்ட் வந்தது..இதையடுத்து, போலீசார் தீபக்கின் மனைவி ஷிவானியை பிடித்து விசாரித்தனர்.. அப்போது வேறு வழியின்றி மொத்த உண்மைகளையும் ஷிவானி போலீசாரிடம் சொன்னார்.
அதாவது, காதலிக்கும்போது, அரசு பணியில் வேலையில் இருந்தார் தீபக்... திருமணமானதுமே, அந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.. இதை ஷிவானி எதிர்பார்க்கவில்லை.. கணவரை கொன்றுவிட்டால், அவரது ரயில்வே பணியை கபளீகரம் செய்து கொள்ளலாம் என்பதே ஷிவானியின் பிளானாக இருந்துள்ளது..
பகீர் வாக்குமூலம்
இதற்காகவே சம்பவத்தன்று, பாலில் தூக்க மாத்திரை கலந்து, கணவனுக்கு தந்துள்ளார்.. அதை குடித்து தீபக் மயங்கியதுமே, அவரது கழுத்தை கொன்றுள்ளார். தன்னுடைய ஆண் நண்பரையும் வீட்டுக்கு வரவழைத்து, இந்த கொலையை அரங்கேற்றியிருக்கிறார் ஷிவானி.. அதுமட்டுமல்ல, தன்னுடைய மாமியாரையும் ஷிவானி கொடுமைப்படுத்தி வந்தாராம்.
இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக தந்ததையடுத்து, ஷிவானியும், அவரது ஆண் நண்பரும் கைதாகி உள்ளனர். அரசு வேலையை கைப்பற்றுவதற்காக காதல் கணவனை, மனைவியே கொலை செய்து, அது இயற்கை மரணம் என்று நாடகமாடியது உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications