ஸ்மிருதி இரானிக்கு ஓட்டு போட மாட்டோம்.. உறுதி ஏற்ற ராஜ்புத் சமூகத்தினர்! பாஜகவுக்கு சிக்கல்
லக்னோ: லோக்சபா தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராஜ்புத் சமூகத்தினர் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

இதனையடுத்து ஆந்திரா (25 தொகுதிகள்), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), தெலங்கானா (17), உத்தரப் பிரதேசம் (13), மேற்குவங்கம் (8) ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 10 மாநிலங்களில் 93 தொகுதிகளுக்கு மே 13ம் தேதி 4ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
மே 20ம் தேதி பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1, ஜார்க்கண்ட் 3, லடாக் 1, மகாராஷ்டிரா 13, ஒடிஷா 5, உ.பி. 14, மே. வங்கம் 7 என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது.
காரணம் அங்கு நடைபெறும் ராஜ்புத் சமூகத்தினரின் போராட்டங்கள்தான். குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் தொகுதியின் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பர்ஷோத்தம் ரூபாலா, சமீபத்தில் ராஜ்புத் சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். ராஜ்புத்திர சமூகத்தினர் ஆங்கிலேயர்களோடு வர்த்தக உறவு வைத்ததோடு, பெண் கொடுக்கவும் செய்தார்கள் என்று இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
இதற்கு ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரூபாலாவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை பாஜ அறிவிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பாஜ தலைமை இதனை கண்டுகொள்ளவில்லை. எனவே குஜராத் மட்டுமல்லாது ராஜ்புத் சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில்தான் உத்தரப் பிரதேசத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராஜ்புத் சமூகத்தினர் உறுதிமொழி எடுத்துள்ளனர். ஸ்மிருதி இரானிஉ.பியின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு ராஜ்புத் சமூகத்தினர் வாக்களிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. பாஜக வேட்பாளரை மாற்றி, ராஜ்புத் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் மொத்தம் 80 தொகுதிகள் இருக்கின்றன. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், இந்த 80 தொகுதிகளையும் மொத்தமாக அள்ள வேண்டும். எனவே பாஜக இங்கு திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இப்படி இருக்கையில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக பஞ்சாயத்துகள் கிளம்பியிருப்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications