நெருங்கிய ரம்ஜான்.. ரோட்டில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் - லைசென்ஸ் ரத்து.. வெளியான அதிரடி உத்தரவு
லக்னோ: ரம்ஜான் பண்டிகையையொட்டி சாலைகளில் ‛நமாஸ்' செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப்பதிவு செய்வது மட்டுமின்றி பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை ரத்து செய்யப்படும் என்று உத்தர பிரதேசத்தின் மீரட் சிட்டி எஸ்பி வார்னிங் செய்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அதன்பிறகு இஃப்தார் விருந்துடன் நோன்பை முடித்து வருகின்றனர்.
வரும் 31ம் தேதி நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் என்பது பிறையின் அடிப்படையில் கொண்டாடப்பட உள்ளது இதனால் சில இடங்களில் ஒருநாளுக்கு முன்பு அல்லது ஒருநாளைக்கு பின்பு கூட ரம்ஜான் கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தான் ரம்ஜான் பண்டிகையையொட்டி உத்தர பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இருபிரிவினரை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி கூட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு உத்தர பிரதேச மாநில காவல்துறை பல்வேறு அறிவுரைகைளை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக மீரட் எஸ்பி (சிட்டி) அயூஸ் விக்ரம் சார்பில் அனைத்து இமாம்களுக்கும் முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமியர்களை மசூதியில் தொழுகை மேற்கொள்ள கூற வேண்டும். சாலைகளில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை என்பது எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். சாலைகளில் தொழுகை நடத்துவதற்கு அனுமதியில்லை. சாலைகளில் தொழுகை நடத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் இந்த ஆண்டு சாலைகளில் நமாஸ் செய்ய அனுமதியில்லை.
இதை மீறி சாலைகளில் நமாஸ் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குப்பதிவு செய்யப்படும். அதுமட்டுமின்றி பாஸ்போர்ட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை ரத்து செய்யப்படும் என்று வார்னிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையில்லா சான்றும்(என்ஓசி) வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்று இருந்தால் தான் புதிய பாஸ்போர்ட் பெற முடியும் என்பதால் போலீசார் இந்த எச்சரிக்கையை வழங்கி உள்ளனர்.
கடந்த ஆண்டும் உத்தர பிரதேசத்தில் இதுபோன்ற நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டது. மொத்தம் 200 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது. இதில் 80 பேர் அடையாளம் காணப்பட்டனர். அந்த வகையில் இந்த ஆண்டும் உத்தர பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சாலைகளில் நமாஸ் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான இடங்களில் ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தர பிரதேச போலீசார் தயார் நிலையில் உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகைக்கான இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications